எப்படி தொடணும்னு சொல்லிக் கொடுங்க.. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மாஸ்டர் டெலிடட் சீன்!

சென்னை: மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சியை அமேசான் பிரைம் நேற்று வெளியிட்ட நிலையில், அது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 3 மணி நேர பெரிய படமாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியானது.

அமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியான நிலையிலும், டெலிடட் காட்சிகளை சேர்த்து வெளியிடவில்லை.

கேப்டன் கூல் தோனி

கேப்டன் கூல் தோனி

டெலிடட் சீன் ஆரம்ப காட்சியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கொண்டு வகுப்பெடுக்கும் ஜேடி, ரொம்ப பிரெஷரான சிச்சுவேஷனிலும் தோனி கூலா முடிவு எடுக்கிறதால தான் அவரை கேப்டன் கூல்ன்னு நாம கூப்பிடுறோம் என கிளாஸ் எடுக்கும் போது, ஒரு மாணவி வந்து சவீதாவின் பெற்றோர்கள் கேஸை வாபஸ் வாங்க போராங்கன்னு சொல்ல அங்கிருந்து மாளவிகா மோகனன் வகுப்பெடுக்கும் கிளாஸ்க்கு செல்கிறார்.

கெளரி கிஷனை அழைத்துக் கொண்டு

கெளரி கிஷனை அழைத்துக் கொண்டு

சவீதா எனும் கதபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கெளரி கிஷனை மாளவிகா மோகனனை மீறி அழைத்துச் செல்கிறார் ஜேடி. ஒட்டுமொத்த மாணவர்கள் படையும் ஜேடி பின்னால் பிரின்ஸிபல் ரூமிற்குள் நுழைகின்றனர். ஜேடி நீ எந்த பிரச்சனையும் பண்ணாத என அழகம் பெருமாள் பேச, ஆசிரியர்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களும் ஜேடி மீது குறைசொல்கின்றனர்.

பெண்களின் ஆடை

பெண்களின் ஆடை

பொண்ணுங்கள எப்படி வேணா டிரெஸ் பண்ண சொன்னாரு அதான் இந்த பிரச்சனைக்கே காரணம் என ஒரு டீச்சர் சொல்ல, இன்னும் எத்தனை நாளைக்கு பெண்களின் ஆடைகளையே குறை சொல்வீங்க என சமீபத்தில் பொருட்காட்சி ஒன்றில் போலீஸ் உடை அணிந்த பெண், புர்கா போட்டிருந்த பெண், பேம்பர்ஸ் போட்ட கைக் குழந்தை என ஆடை பேதமின்றி பலாத்காரம் செய்யப்பட்ட கதையும் சொல்லி அனைவரையும் சிந்திக்க வைக்கிறார் ஜேடி.

எப்படி தொடணும்னு

பெண்கள் பக்கத்தில் உட்காரக் கூடாது, தொடக் கூடாதுன்னு சொல்றதுக்கு பதிலா, பசங்களுக்கு எப்படி தொடணும்னு ஆசிரியர்கள் சொல்லித் தரணும் என சேத்தனை பார்த்து பேச அவர் அப்படியே பம்மி ஒடுங்குகிறார். கடைசியாக சவீதாவிடம் தவறாக நடந்து கொண்ட மாணவனின் அம்மாவிடம் நீங்களே போலீஸில் ஒப்படைத்து விடுங்கள் என மாஸாக பேசும் காட்சி வேற லெவல்.

அம்பு விடுற சீன்

அம்பு விடுற சீன்

அந்த அம்பு விடுற சீனை கட் பண்ணிட்டு கூட இந்த சீனை படத்தில வச்சிருக்கலாம். செம சூப்பராக இருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், அமேசான் பிரைம் வெளியிட்ட இந்த மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

வேற ஏதாவது

வேற ஏதாவது

இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே மாஸ்டர் படம் தான் ஏகப்பட்ட மக்களின் ஃபேவரைட் படமாக மாறியுள்ளது. அதன் காரணமாக ஜேடி மற்றும் பவானியின் வேற ஏதாவது காட்சிகள் இருந்தாலும், வெளியிடுங்க பார்க்க நாங்க ரொம்பவே ஆவலோடு இருக்கோம் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒஎஸ்டி

ஒஎஸ்டி

மேலும், மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கையும் படக்குழு நேற்று வெளியிட்டு வைரலாக்கி உள்ளது. மாஸ்டர் டெலிடட் காட்சி மற்றும் ஒஎஸ்டியை தளபதி ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்தும் டவுன்லோடு செய்தும் பார்த்து வருகின்றனர். தளபதி 65 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X