வைரலாகும் வதந்தி.. ரசிகர்களுக்கு அலர்ட் கொடுத்த மாஸ்டர் இயக்குநர்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: கொரோனா பாதிப்பு மட்டும் ஏற்படாமல் இருந்தால், இந்நேரம் மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கும்.

Recommended Video

Master Alert | Lokesh Kanagaraj Tweet | Thalapathy Vijay

திட்டமிட்டபடி தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வந்திருக்கும்.

ஆனால், கொரோனா பாதிப்பால், ஒட்டுமொத்த திரையுலகத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகி போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ரசிகர்களுக்கு ஒரு அலர்ட் விடுத்துள்ளார்.

ரொம்ப சீக்கிரமே

ரொம்ப சீக்கிரமே

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது முதல் படத்திலேயே, தான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை தமிழ் ரசிகர்களுக்கு உணர்த்தி விட்டார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான கைதி படம் இந்தியளவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ரொம்ப சீக்கிரமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

ரசிகர்களுக்கு அலர்ட்

மாஸ்டர் படம் வெளியாகாமல் உள்ள நிலையில், மாஸ்டர் படம் குறித்த அப்டேட்டுகள் லோகேஷ் கனகராஜின் பெயரில் உள்ள இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாகி வருகின்றன. அதனால், ரசிகர்களுக்கு அதனை தெளிவுப் படுத்தும் விதமாக, ட்விட்டரில் மட்டுமே தான் இருப்பதாகவும், மற்ற கணக்குகள் ஃபேக் ஐடிக்கள் என்ற அலர்ட்டை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

டிரைலர் ரிலீஸ்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்பது தெரிகிறது. அட்லீஸ்ட் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்டாவது சொல்லிட்டு போங்க தலைவா என ஆன்லைனில் அலர்ட் சொல்ல ஆஜரான லோகேஷ் கனகராஜை சூழ்ந்து கொண்டு தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்க தொடங்கி விட்டனர்.

பார்த்து பண்ணுங்க

ப்ரோ படம் தான் ரிலீஸ் ஆகமுடியாத நிலைமை, ஷூட்டிங் போட்டோஸ் ஆவது கொஞ்சம் ரிலீஸ் பண்ணலாமே, மாஸ்டர் படத்தின் அப்டேட் ஏதும் இல்லாம இந்த குவாரண்டின் காலத்தில் ரொம்ப போர் அடிக்குது, பார்த்து பண்ணுங்க ப்ரோ என்றும் பல தளபதி ரசிகர்கள் இந்த ரசிகரை போலவே கமெண்ட் பக்கத்தில் அன்புத் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இதுதான் காரணமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்பட மாட்டாது என்றும், புதிய படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் தான் ரிலீசாகும் என்பது போன்ற வதந்திகள் பரவி வருகிறது. மாஸ்டர் படமும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது போன்ற போஸ்டர் வைரலாகவே, லோகேஷ் கனகராஜ் இந்த அலர்ட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

விஜய் ஸ்டைலில்

மாஸ்டர் படம் தொடங்கியதில் இருந்து லோகேஷ் கனகராஜை அங்குலம் அங்குலமாக ஃபாலோ செய்து வரும் விஜய் ரசிகர்களுக்கு அவர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இல்லை என்பது தெரியாதா என்பதை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், லோகேஷை பார்த்த சொன்ன வசனத்தை வைத்தே சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X