கமல் பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. மாஸ்டர் இயக்குநர் வெளியிட்ட மாஸ் அப்டேட்.. என்ன தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று சூப்பரான சர்ப்ரைஸ் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்கிற அப்டேட்டை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தனது தலைவரான கமலை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.

நவம்பர் 7

நவம்பர் 7

வரும் நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக காமன் டிபியை நேற்று, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். நடிகரும் அரசியல் தலைவருமான கமலின் பிறந்தநாளில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

டைட்டில் டீசர்

டைட்டில் டீசர்

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் அப்டேட் டீசர் கமல்ஹாசன் பிறந்தநாளான வரும் நவம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள ஹாட் அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது அறிவித்துள்ளார்.

ரத்னகுமார் கலாய்

ரத்னகுமார் கலாய்

மாஸ்டர் படத்தின் அப்டேட்களை விட்டு விட்டு, இயக்குநர் ரத்னகுமார் கமல் பட அப்டேட்களாக கொடுத்து வருவதை கிண்டல் செய்யும் விதமாக, "பார்.. முழுசா கமல் ஃபேனா மாறிய மாஸ்டர் இயக்குநரை பார்" என சந்திரமுகி பட மீமை போட்டு பங்கம் பண்ணி உள்ளார். விஜய் ரசிகர்களும் மாஸ்டர் அப்டேட்டை கேட்டு லோகேஷ் கனகராஜை லாக் செய்து வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் என தெரிகிறது. "எவனென்று நினைத்தாய்" என்ற டைட்டில் அறிவிப்புடன் ராஜ்கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படம் வரும் 2021ம் ஆண்டு சம்மரில் ரிலீசாகும் என இந்த அறிவிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு மாற்றமா?

தலைப்பு மாற்றமா?

கமல்ஹாசனின் 232வது படம் என்றும், டைட்டில் அறிவிப்பு டீசர் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நிலையில், "எவனென்று நினைத்தாய்" தலைப்பு மாற்றப்படுகிறதா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், கமல் பிறந்தநாள் அன்று தரமான ட்ரீட் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X