மாஸ்டர் இயக்குநர் வெளியிட்ட தனுஷ் பிறந்தநாள் சிடிபி.. 3டியில் சும்மா தெறிக்குது!

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாள் சிடிபியை தற்போது மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வரும் ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷின் 37வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

ஜூலை முதல் நாளே, ஜகமே தந்திரம் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரசிகர்களுக்கு செம அப்டேட் வெளியிட்டு, தனஷு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த நிலையில், தற்போது இந்த சிடிபி வெளியாகி வைரலாகி வருகிறது.

புது டிரெண்டிங்

புது டிரெண்டிங்

நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் காமன் டிபியை ரிலீஸ் செய்வது தற்போது புதிதாக டிரெண்டாகி வருகிறது. தல அஜித், தளபதி விஜய், சூர்யா பிறந்தநாள் காமன் டிபிக்கள் வெளியாகி சாதனை படைத்த நிலையில், தற்போது நடிகர் தனுஷின் பிறந்தநாள் காமன் டிபியும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

டிசைனர் யாரு

டிசைனர் யாரு

காமன் டிபிக்களை பிரத்யேகமாக டிசைனர்கள் புதுசு புதுசா க்ரியேட்டிவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனுஷின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகி இருக்கும் இந்த அசத்தலான காமன் டிபியை டிசைனர் கபிலன் செல்லய்யா அட்டகாசமாக வடிவமைத்து இருக்கிறார்.

மாஸ்டர் இயக்குநர்

மாஸ்டர் இயக்குநர்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷின் பிறந்தநாள் காமன் டிபியை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்பான அண்ணன்

அன்பான அண்ணன்

நடிகர் தனுஷை ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதிலும், அவரை ஒரு திறமையான நடிகராக மாற்றியதிலும் பெரும் பங்கு கொண்ட ஜீனியஸ் இயக்குநரும், தனுஷின் அன்பான அண்ணனுமான இயக்குநர் செல்வராகவனும் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த காமன் டிபியை ஷேர் செய்திருக்கிறார்.

3டியில்

3டியில்

காதல் கொண்டேன் படம் முதல் நடிகர் தனுஷ் நடித்த படங்களின் பிரத்யேகமான கதாபாத்திரங்களுக்கு நடுவே, கையில் வாளுடன் கோட் சூட்டில், செம மாஸாக தனுஷ் இருக்கும் இந்த காமன் டிபி, 3டியில் இருப்பது போன்று அதி அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை பல பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X