மாஸ்டர் சூப்பரா? சுமாரா? ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்?

சென்னை: மாஸ்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியான நிலையில், படத்திற்கு ஆரம்பத்தில் பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் குவிந்தன.

ஆனால், இரண்டாம் பாதி படத்தை பார்த்த பிறகு மாஸ்டர் படம் ரொம்பவே சுமார் என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் குவிந்து வருகின்றன.

மாஸ்டர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என #MasterDisaster ஹாஷ்டேக்கை டிரெண்டிங் செய்து மாஸ்டர் மீம்களை குவித்து வருகின்றனர்.

பக்கா ஃபேன் மெட்டிரீயல்

பக்கா ஃபேன் மெட்டிரீயல்

மாநகரம், கைதி படம் அளவுக்கு மாஸ்டர் திரைப்படம் இல்லை என்றும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விட்டார் என்றும் ஏகப்பட்ட கலவையான விமர்சனங்களும் மீம்களும் குவிந்து வருகின்றன. மாஸ்டர் பக்கா ஃபேன் மெட்டிரீயல்.. அப்படியா.. ஆமாம், சூர்யா, அஜித் ரசிகர்களுக்கு என இந்த மீம் பங்கம் பண்ணியுள்ளது.

அட்லி அண்ணா

அட்லி அண்ணா

கைதி மாதிரி படம் வேணும்னு தானே லோகேஷ் கிட்ட போன.. என் கிட்ட சொல்லியிருந்தா கைதியவே உல்டா பண்ணி எடுத்து கொடுத்துருப்பேன்ல என அட்லி அண்ணா சொல்வது போல மீம் போட்டு வச்சி கலாய்த்து வருகின்றனர். கைதி அளவுக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை, பிகில் அளவுக்கு கூட படம் இல்லையாம்.

கொரோனாவே மேல்டா சாமி

கொரோனாவே மேல்டா சாமி

தியேட்டர் நுழைவு வாயிலில் மாஸ்டர் FDFSக்கு வெயிட் பண்ண ரசிகர்கள் தளபதியே என கத்திக் கொண்டு தியேட்டருக்கு போயிட்டு, வெளியே வரும் போது, தலைவிதியேன்னு.. இதுக்கு கொரோனாவே மேல்டா சாமி என தெறித்து ஓடுவதாக இந்த நெட்டிசன் கலாய்த்து மீம் போட்டுள்ளார்.

கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே

கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே

இதுவரைக்கும் பார்க்காத விஜய்ய மாஸ்டர்ல பார்க்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடிப் போச்சு என மரண பங்க மீம்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தூங்கிட்டாங்க

தூங்கிட்டாங்க

மாஸ்டர் படத்தின் முதல் பாதி பரபரப்பாக இருந்ததாகவும், இரண்டாவது பாதியில் மிகப்பெரிய சிக்கல் மற்றும் தொய்வு ஏற்பட்டதால், ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டரில் தூங்கியே விட்டனர் என்றும், தியேட்டரில் தூங்குவது போல சில போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி மாஸ்டர் படத்தை டிசாஸ்டர் ஆக்கி வருகிறது.

நெக்ஸ்ட் நெல்சன்

நெக்ஸ்ட் நெல்சன்

அட்லி, ஏ.அர். முருகதாஸ், இப்போ லோகேஷ் கனகராஜுக்கும் ஆப்பு வச்சாச்சு.. அடுத்தது நீ தான் என இயக்குநர் நெல்சன் தான் அடுத்த பலியாடு என பாகுபலி சீனை எல்லாம் மீமாக போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த பொங்கல் மாஸ்டர் பொங்கலாக இருக்கும் என்று பார்த்தால், மாஸ்டருக்கே பொங்கல் வைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ் என கலாய்த்து வருகின்றனர்.

மாஸ்டர் விமர்சனம்

மாஸ்டர் விமர்சனம்

மாநகரம் சூப்பர், கைதி சூப்பரோ சூப்பர், மாஸ்டர் அய்யோ அப்பா முடியல என லோகேஷ் கனகராஜ் படங்களை குறிப்பிட்டே மாஸ்டர் படத்தை மொக்கைப் படுத்தி மீம்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர். பிகில் படம் கூடவே கைதி எடுத்து ஹிட் ஆக்கியதற்காகவே விஜய் லோகேஷ் வாழ்க்கையில் பாஸ்கெட் பால் விளையாடி விட்டார் என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X