இப்படி கதறுறாரே.. டிடி நெக்ஸ்ட் லெவல் “கோவிந்தா” பாடலுடன் மாஸ்டர் நடிகை போட்ட டாட்டூவை பாருங்க!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் சுரேகா வாணி தனது கையில் பெருமாள் தொடர்பான டாட்டூவை போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தனது மகளுடன் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வைரல் ஆக்கி வரும் சுரேகா வாணி லேட்டஸ்டாக வெளியிட்டுள்ளடாட்டூ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பார்ட்டி மோடிலும், பக்தி மோடிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்கிற அளவுக்கு சோசியல் மீடியா குயின் ஆகவே வலம் வருகிறார்.

Master fame Actress Surekha Vani crying in her recent Perumal tattoo video
Photo Credit:

சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம் பெற்ற அறிமுக பாடல் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு எதிராக பவன் கல்யாண் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஓடிடியில் இடம்பெறுமா?: டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள நிலையில், தியேட்டரில் பெரிதாக வசூல் வேட்டை நடத்தாத நிலையில், நாளை Z5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் நீக்கப்பட்ட கோவிந்தா பாடல் ஓடிடியில் இடம்பெறும் வெர்ஷனில் சேர்க்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஓடிடியில் வெளியானாலும் மறுபடியும் 100 கோடி கேட்டு பிரச்னை உருவாகும் என்கின்றனர்.

பெருமாள் பாதம் டாட்டூ: திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தையான நடிகை சுரேகா வாணி பெருமாள் நாமம் மற்றும் பாதத்தை தனது கையில் பச்சை குத்தியுள்ள வீடியோவை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படி கதறி அழுறாரே: பொதுவாகவே நடிகைகள் டாட்டூ போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டால் சிரித்த முகத்துடன் வலிக்காதது போல கெத்து காட்டுவார்கள். ஆனால், தனக்கு மிகவும் பிடித்த பெருமாள் டாட்டூவை போட்டுக் கொள்ளும் போதும், வலி தாங்க முடியாமல் அவர் கத்தி கதறி அழும் வீடியோவையும் எடுத்து அவரது மகள் ஷேர் செய்து இருக்கிறார்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை: தெலுங்கில் ஹனிமூன் எக்ஸ்பிரஸ், பிருந்தாவனம், போலா சங்கர், பங்கராஜு தமிழில் விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுரேகா வாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதுக்கு வந்த மகள் இருந்தாலும், கவர்ச்சிக்கே பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே வைத்திருக்கிறார். அடிக்கடி சுற்றுலா செல்லும் இவர், அங்கே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அம்மா, அக்கா, அண்ணி, டாக்டர், நர்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் என்றால் உடனடியாக இயக்குநர்கள் சுரேகா வாணியை அழைத்து நடிக்க வைத்து விடுகின்றனர். இன்னமும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால், தனது திறமையை அழகாக இவர் வெளிப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X