12ம் வகுப்பில் வில்லன் நடிகர் விஜய் சத்யாவின் மகன் இவ்ளோ மார்க்கா?.. ஹீரோ கணக்கா இருக்காரே தர்ஷன்!

சென்னை: கடந்த வாரம் மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களை விட வழக்கம் போல இந்த முறையும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். அதிகபட்சமாக மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் 600க்கு 599 மதிப்பெண்களை அள்ளி மாநிலத்திலேயே முதலிடத்தை பெற்றனர்.

காமெடி நடிகர் முத்துக்காளையின் மகன் வாசன் முரளி நல்ல மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த நிலையில், அவரது தந்தை பால்கோவா எல்லாம் வாங்கிக் கொடுத்து தனது மகனை வாழ்த்தினார். அடுத்ததாக கல்லூரி ஒன்றில் மகனை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Master fame Vijay Sathya son scores 501 600 in 12th standard

இந்நிலையில், விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து வரும் நடிகர் சத்யாவின் மகனும் +2வில் முத்துக்காளையின் மகனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் சற்றுமுன் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்சி முடிவுகள்: கடந்த வாரம் மே 8ம் தேதி தமிழ்நாட்டில் ஸ்டேட் போர்டு தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியாகின. இன்று சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் அதிகபட்சமாக பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி மற்றும் திருப்பூரை சேர்ந்த ராகுல் என இரு மாணவர்கள் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவர்களாக மாறினர்.

முத்துக்காளை மகன் மதிப்பெண்கள்: சினிமா உலகினரின் குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பொதுத் தேர்வுகளை எழுதி சாதித்து வருகின்றனர். நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மகன் வாசன் முரளி தமிழில் 81, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 92, ஆங்கிலத்தில் 64, எக்கனாமிக்ஸில் 62, காமர்ஸில் 76 மற்றும் அக்கவுண்ட்ஸியில் 63 என ஒட்டுமொத்தமாக 600க்கு 438 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தனது மகனுக்கு பால்கோவா வாங்கிக் கொடுத்து மார்க் ஷீட்டையும் முத்துக்காளை ஷேர் செய்திருந்தார்.

Master fame Vijay Sathya son scores 501 600 in 12th standard

வில்லன் நடிகர் விஜய் சத்யா: மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை திட்டிக் கொண்டே ரோட்டுக்கு செல்லும் போது லாரியில் அடிபட்டு சாவாரே அவர் தான் வில்லன் நடிகர் விஜய் சத்யா. மோகன்லாலின் தொடரும் ரஜினிகாந்தின் கூலி என பல படங்களில் நடித்துள்ளார். சிறு பட்ஜெட் படங்களிலும் மிரட்டல் வில்லனாக நடித்து வருகிறார். ரச்சிதா மகாலட்சுமியின் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் இவரது மகனும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மகனின் மார்க்கை சற்றுமுன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

600க்கு 501: நடிகர் முத்துக்காளையின் மகன் 438 மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆன நிலையில், நடிகர் விஜய் சத்யாவின் மகன் தர்ஷன் 600க்கு 501 மதிப்பெண்களை பெற்றுள்ளார். பார்க்க ஹீரோ போல இருக்கிறார் என்றும் சினிமாவில் ஆர்வம் இருந்தால் அப்பாவை விட பெரிதாக சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படிப்பில் ஆர்வத்தை செலுத்தி பல பட்டங்களை வெல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X