மாஸ்டர் போஸ்டர்.. வேற லெவல் டிசைன்.. காருக்குள்ள விஜய்.. பக்கத்துல பூனை.. டிசைனர் யாரு தெரியுமா?
Recommended Video
சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று, ரியல் போஸ்டரை விட சூப்பரா இருக்கு என இயக்குநர் ரத்னகுமார் ஷேர் செய்துள்ளார்.
தளபதி விஜய்யின் 64வது படமான மாஸ்டர் திரைப்படம், இறுதி கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ், தளபதி ரசிகர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக தரமான சம்பவம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இறுதி கட்டத்தில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் படு வேகமாக உருவாகி வருகிறது. ஷூட்டிங் முடிந்தவுடன், ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து ஏப்ரலுக்கு வெளியாகும் என தெரிகிறது.

4வது லுக் போஸ்டர்
மாஸ்டர் படத்தின் 4வது லுக் போஸ்டராகவே இதனை கருதலாம். அந்த அளவுக்கு பிரில்லியன்ட் ஒர்க்கை அந்த ரசிகர் செய்துள்ளார். மேலும், காருக்குள் இருக்கும் விஜய்க்கு பக்கத்தில் ஒரு பூனையை வைத்தது எல்லாம் வேற லெவல் க்ரியேட்டிவிட்டி. தளபதி ரசிகர்கள் இந்த ஃபேன் மேட் போஸ்டரை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
ரத்னகுமார் பாராட்டு
நீலக் கலர் காருக்குள் தளபதி விஜய் இருப்பது போன்ற அட்டகாசமான போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ஆடை பட இயக்குநரும், மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார், நெருப்பா இருக்குதுன்னு ஃபயர் எமோஜிக்களை பதிவிட்டு பாராட்டி உள்ளார்.
இதை பார்த்து கத்துக்கோங்க
மேலும், குசும்புக்காரரான ரத்னகுமார், மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்களை உருவாக்கி வரும் பிரபல போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னாவின், பார்வைக்கு படும் படி, இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்து கத்துக்கோங்க கோபி என சொல்வது போலவே ரத்னாவின் ட்வீட் உள்ளது.

செகண்ட் சிங்கிள்
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் என சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. மகா சிவராத்திரியான நேற்று, இரண்டாவது சிங்கிள் வருமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, விரைவிலேயே மாஸ்டர் டீமிடம் இருந்து சூப்பரான ட்ரீட் காத்துக்கிட்டு இருக்கு..


Click it and Unblock the Notifications











