மாஸ்டர் மோதல்.. தளபதி விஜய்யும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் எங்கே மோதிக்கப் போறாங்க தெரியுமா?
Recommended Video
சென்னை: மாஸ்டர் படத்தின் மாஸான கிளைமேக்ஸ் சண்டை காட்சி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர்.
சமீபத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதிக் கொள்வது போன்று உருவாக்கப்பட்ட மாஸ்டர் படத்தின் 3வது லுக் உலகளவில் வைரலானது.

பின்னி மில்
வழக்கமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்றாலே பின்னி மில்லில் தான் அதிகம் படமாக்கப்படும். விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் கிளை மேக்ஸ் காட்சியும் பின்னி மில்லில் தான் எடுக்கப்பட்டது. தளபதி விஜய்யின் பல ஸ்டன்ட் காட்சிகள் இங்கே படமாக்கபட்டுள்ளன.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
ஆனால், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி பின்னி மில்லுக்கு பதிலாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் அடுத்த மாத இறுதியில் படமாக்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மற்றும் விஜய்சேதுபதி கிளைமேக்ஸ் காட்சியில் அடித்துக் கொள்ளப் போகும் சண்டைக்காட்சியை அங்கு படமாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம்.

ஷூட் ஓவர்
பிப்ரவரி இறுதி வாரத்தில் எடுக்க உள்ள அந்த கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியுடன் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடையும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் பார்த்ததை விட பயங்கரமாக இந்த சண்டை இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

டைட் செக்யூரிட்டி
அனிருத் இசையில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் இதுதான் என ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகும் வரை மாஸ்டர் படத்தில் இருந்து எந்தவொரு காட்சியோ அல்லது தகவலோ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கசியக் கூடாது என லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினருக்கு கட்டளை போட்டு செக்யூரிட்டியையும் டைட் செய்துள்ளாராம்.

ரசிகர்கள் ஹேப்பி
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக்கில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை காட்டாமல் இருந்த போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் இருந்த விஜய்சேதுபதி ரசிகர்கள், மூன்றாவது லுக்கில் தளபதி விஜய்யுடன் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக மோதிக் கொள்ளும் போஸ்டரை பார்த்து பயங்கர ஹேப்பி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications