மாஸ்டர் ஸ்ட்ரோக்.. தளபதி விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் குறித்து பிரபலங்கள் என்ன சொல்றாங்க?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என்ற மாஸான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் ரசிகர்கள் போலவே பல சினிமா பிரபலங்களும் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்குக்காக காத்துக் கிடந்தனர்.

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களை இங்கே காண்போம்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

தளபதி விஜய்யின் 64வது படத்திற்கு ‘மாஸ்டர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு தற்போது வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த இயக்குநர் கார்த்திக் நரேன், மாஸ்டர் ஸ்ட்ரோக்னா என லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார்.

அனிருத்

மாஸ்டர் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தனது ட்விட்டர் பக்கத்தில் 2020 கோடை விடுமுறையை தெறிக்கவிடலாம் என கமெண்ட் செய்துள்ளார்.

சுனைனா

தளபதி விஜய்யின் தெறி படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஃபயராக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

தளபதி விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு என மாஸ்டர் டீம் அனைவருக்கும் மாஸ்டர் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அறிவழகன்

ரொம்ப சந்தோஷம் மாஸ்டர் படம் வெற்றிபெற எனது வாழ்த்துகள் என இயக்குநர் அறிவழகன் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார்.

வெறித்தனம்

தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து மூன்று மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி, மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து வெறித்தனம் என ட்வீட் போட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்

திருமலை படத்தில் இருந்தே நடிகர் விஜய்யும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் நண்பர்கள் தான். மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த லாரன்ஸ், "நண்பா மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அருமை. மாஸ்டர் படம் வெற்றிபெற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்" என ட்வீட் போட்டுள்ளார்.

விஜே. ரம்யா

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து வரும் விஜே. ரம்யா, இந்த தருணம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என ட்வீட் போட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

ஆப்பிரிக்காவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் மாஸ்டர் பட நாயகி, படத்தின் டைட்டில் லுக் வெளியானதை நடனமாடி கொண்டாடும் விதமாக எமோஜி ட்வீட் போட்டுள்ளார்.

மஞ்சிமா மோகன்

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ஃபயராக இருக்கிறது என நடிகை மஞ்சிமா மோகன் ட்வீட் போட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ்

வாவ்.. மாஸ்டர் செம்ம சார்.. நெருப்பா இருக்குதுன்னு தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் போட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X