ஸ்டைலா கெத்தா மாஸா.. மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட வேற லெவல் புகைப்படங்கள்!
சென்னை: மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார் மாளவிகா மோகனன் .
இப்பொழுது தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
மலையாளம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒப்பந்தமாகி வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது செம ஸ்டைலிஸ் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பட்டையை கிளப்பி இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக
மாநகரம்,கைதி என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவது படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து அனைவரையும் கவர்ந்த தோடு இப்பொழுது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.

கொரோனா 2வது அலை
விஜயை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கும் என படக்குழு தெரிவித்திருந்தது . அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வந்து சொதப்பி விட்டது. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் மாபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.
Recommended Video

மிதக்க விட்டு
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடித்த சென்றுள்ள மாளவிகா ஷாகித் கபூர்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட வெப்சீரிஸ் மற்றும் யுத்ரா என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் இன்னும் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆக வேண்டும் என இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கண்களில் படும் அளவிற்கு எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மிதக்க விட்டு வருகிறார்.

கெத்தா ஸ்டைலா மாஸா
அந்த வகையில் இப்பொழுது உடற்பயிற்சி செய்யும் ஜிம்னாஸ்டிக் சூட்டில் பார்க்கும் அனைவரையும் வசியம் செய்யும் அளவிற்கு தொடை அழகு தெரிய படுகவர்ச்சியாக குடோனில் உட்கார்ந்து வளச்சு வளச்சு போஸ் கொடுத்தவாறு எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகாவை பார்த்த ரசிகர்கள் கெத்தா ஸ்டைலா மாஸா இருக்கிங்க என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











