ஒரு பக்கம் ஆக்‌ஷன்.. ஒரு பக்கம் ஃபேஷன்.. கடல் கன்னியாவே மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

Recommended Video

Master Malavika Mohanan Recent Glamourous Photoshoot | Thalapathy Vijay

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் கைதி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர்.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

நடிப்பை போலவே மாடலிங் துறையிலும் கலக்கி வரும் இவர், நேற்று நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கடல் கன்னி லுக்கில் ரேம்ப் வாக் செய்துள்ளார்.

என்ன வாய்ஸ் சார்

காதலர் தினத்தை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி 12 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலை கேட்ட மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், என்ன ஒரு வாய்ஸ் சார்.. உங்க குரலுக்கு அடிக்ட் ஆகிட்டேன்.. ரிப்பீட் மோடில குட்டி ஸ்டோரி கேட்டுட்டு வருகிறேன் என ஐஸ் வைத்துள்ளார்.

கடல் கன்னி

ஸ்ட்ராபெர்ரி போலவும், செம்ம ஹாட்டாகவும் பல விதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு, தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்து வருகிறார் மாளவிகா மோகனன். நேற்று இரவு நடைபெற்ற லேக்மி ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், மெர்மெய்ட் லுக்கில் கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தலைவியே

சிகப்பு நிறத்தில், தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி செம்ம ஹாட்டாக சமீபத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்ட புகைப்படத்தை பகிர்ந்து, தலைவியே என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க தொடங்கியதில் இருந்தே தளபதி ரசிகர்கள் ஆதரவு அம்மணிக்கு பெருகி வருகிறது.

மச்சக்கன்னி மாளவிகா

டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாகவும், ரஜினிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். கடல் கன்னி போல இருக்கும் புகைப்படத்தை மாளவிகா பகிர்ந்துள்ள நிலையில், மச்சக்கன்னி என இந்த ரசிகர் பேட்ட பட லுக்கை பதிவிட்டுள்ளார்.

அழகு குட்டி செல்லம்

மாடர்ன் டிரெஸ்சில் ஹாட்டாகவும், சேலையில் செம்ம க்யூட்டாகவும் இருக்கும் மாளவிகா மோகனனின் ட்வீட்டுக்கு கீழே, அழகு குட்டி செல்லம் என அரக்கு சேலையில், செடியை பிடித்துத் தொங்கும் அழகான புகைப்படத்தை இந்த ரசிகர் பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார். மேலும், சிலர், நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க என இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்னை ஏமாத்திட்டாங்க

கடல் கன்னிக்கு அழகான கால்கள் இருக்கிறது. அப்போ சின்ன வயசுல இருந்து கடல் கன்னிக்கு கால்கள் இருக்காது என தனக்கு சொன்ன கதைகள் எல்லாம் பொய்யா, சின்ன வயசுல இருந்து எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க என இந்த குசும்புக்கார ரசிகர், மாளவிகா மோகனனின் மெர்மெய்ட் லுக்கை ரசித்து கமெண்ட் செய்துள்ளார்.

மச்சம் எங்க டா?

மாளவிகா மோகனின் இந்த புகைப்படத்தில் அவரது மச்சம் காணாமல் போய்விட்டதாகவும், மச்சம் எங்க டா என காமெடி டெம்பிளேட் மீம் போட்டு சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தளபதி கூட நடிக்கிறீங்க, செம்ம அழகா ஹாட்டா இருக்கீங்க தலைவி என விஜய் ரசிகர்களும், தங்களது கமெண்ட்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X