என்ன சொல்றீங்க? ரசிகர்கள் காண்டாக போறாங்க.. மாஸ்டரில் மாளவிகாவுக்கு இப்படி ஒரு ரோலாம்!
சென்னை: மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனின் ரோல் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
அனிருத் இசையில் உருவாகி உள்ள அனைத்து பாடல்களும், இன்று மாலை மாஸ்டர் வெளியீட்டு விழாவில் ரிலீசாகிறது.

மாஸ்டர் நாயகிகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக நடித்திருந்தார். கைதி படத்தில், நாயகியே இல்லாமல் கார்த்தி டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், மாஸ்டர் படத்தில், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் கெளரி கிஷன் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். மேலும், விஜே ரம்யா, செளந்தர்யா உள்ளிட்ட பல பெண்கள் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாளவிகா மோகனன்
கல்லூரி மாணவியாக கெளரி கிஷனும், முக்கியமான ரோலில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பிற மொழி படங்களில் நடித்து வந்த மாளவிகா பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக அப்கிரேட் ஆகியுள்ளார்.

என்ன ரோல்
விஜய் வாத்தியார் என்றால், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் டீச்சராகத் தானே இருக்கணும். கல்லூரி ஆசிரியையாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரின் மூலம் உறுதியாகி விட்டது. ஆனாலும், மாளவிகா மோகனன் மேல் விஜய் ரசிகர்கள் கோவப்பட ஒரு பயங்கரமான காரணம் இருக்கிறது.

முரட்டு சிங்கிள்
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் இருந்தாலும், இருவரது காதல் கை கூடுமா? என்பது தெரியவில்லை. விஜய் இந்த படத்தில் கடைசி வரை முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பார் என்ற அப்டேட் ஒன்றும் கசிந்துள்ளது. க்விட் பண்ணுடா பாடலும், அதை மையப்படுத்தித் தான் வரும் என புரிகிறது.

ரசிகர்கள் கோபம்
விக்னேஷ் சிவன் வரிகளில், "உன் கண்ணை பார்த்தாக்க" என டீச்சர் மாளவிகாவை சுற்றி சுற்றி லவ் பண்ணும் தளபதி விஜய்யை, கழட்டி விட்டு மாளவிகா சென்று விடுவார் என தெரிகிறது. அதனால், தான் விஜய் மீண்டும் விக்னேஷ் சிவன் வரிகளில் க்விட் பண்ணுடா என்ற பிரேக்கப் சாங்கை பாடவுள்ளார். இந்த காட்சிகள் மட்டும் படத்தில் இடம்பெற்றால், நிச்சயம் விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு மாளவிகா ஆளாவதை யாராலும் தடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











