twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!

    |

    பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!

    சென்னை: மாஸ்டர் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பிக் பாஸ் நிறுவனமான எண்ட்மோல்ஷைன் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது.

    கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்த போதிலும், மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    வசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா?வசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

    எண்ட்மோல்ஷைன் இந்தியா

    எண்ட்மோல்ஷைன் இந்தியா

    உலகம் முழுவதும் எண்ட்மோல் ஷைன் நிறுவனம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்தியாவில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் முதல் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

    தளபதியின் மாஸ்டர்

    தளபதியின் மாஸ்டர்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் படை சூழ கொண்டாட்டத்துடன் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டமாக களைகட்டி வருகிறது. பிகில் படத்திற்கு பிறகு வெளியாகி உள்ள விஜய் படம் என்பதால், ரசிகர்கள் மாஸ்டர் படத்தை ஆவலுடன் தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

    பக்கா ஆக்‌ஷன்

    பக்கா ஆக்‌ஷன்

    மாஸ்டர் படத்தில் பக்கா ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகவும், விஜய்க்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே இருக்கும் மோதல்கள், விஜய்சேதுபதியின் பவானியின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் முற்றிலும் மாறுபட்ட விஜய்யின் ஜேடி கதாபாத்திரம் என பல்வேறு விஷயங்கள் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துள்ளது.

    இந்தியில் ரீமேக்

    மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் Endemolshine நிறுவனம் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும், சினி ஒன் ஸ்டூடியோ மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து பாலிவுட்டில் மாஸ்டரை உருவாக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விஜய் தி மாஸ்டர் என்னாச்சு

    விஜய் தி மாஸ்டர் என்னாச்சு

    மாஸ்டர் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்றும் விஜய் தி மாஸ்டர் என இந்தி மொழியிலேயே டப் செய்தும் ரிலீசானது. இந்நிலையில், மீண்டும் ஏன் இந்தியில் மாஸ்டர் திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு இரு பெரிய பாலிவுட் நடிகர்களை வைத்து மாஸ்டரை உருவாக்க முடிவு செய்துள்ளதாக எண்ட்மோல்ஷைன் இந்தியா நிறுவனர் அபிஷேக் ரேக் அறிவித்துள்ளார்.

    ஹீரோ, வில்லன்

    ஹீரோ, வில்லன்

    மாஸ்டர் திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள நிலையில், அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் என ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. சீக்கிரமே ஜேடியாகவும் பவானியாகவும் மிரட்டப் போறது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    English summary
    Master Hindi remake rights bagged by Endemolshine India which was produced Bigg Boss show all over the world and India too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X