மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.
Recommended Video
நீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது.
இந்த படத்தை XB Film Creators நிறுவனம் தயாரித்தது, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.

கொண்டாடிய ரசிகர்கள்
கொரோனா தாக்கத்தினால் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு பின்னர் திரையரங்குகளில் மாஸ்டர் இந்த பொங்கலுக்கு வெளியானது. ரசிகர்கள் கொடுத்த பேராதரவினால் வசூல் மழை பொழிந்து பல சாதனைகளை மாஸ்டர் திரைப்படம் படைத்தது.

கொரோனா தாக்கம்
கொரோனா தாக்கத்தினால் இழப்பு ஏற்பட்டு முடங்கி போயிருந்த திரையரங்குகள் மாஸ்டர் படத்தின் மூலம் உயிர்தெழுந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தது.

தோல்வியை தழுவியது
சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் ராதே. இந்த படத்தினை பிரபு தேவா இயக்கியிருந்தார். சல்மான் கான் ரசிகர்கள் மத்தியில் ராதே வரவேற்பு பெற்றாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் படம் சோபிக்க தவறி தோல்வியை தழுவியுள்ளது. இது The Outlaws எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும்.

பரவும் தகவல்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் இதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.


Click it and Unblock the Notifications











