பாலிவுட்டில் மிரட்டுவாரா விஜய்? இந்தியில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் டைட்டில் இதுதான்!

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

Recommended Video

Balaji Ex-Loverக்கு கல்யாணம் | Bigg Boss Balaji Love Story - Filmibeat Tamil

பாகுபலி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

மாஸ்டர் திரைப்படமும் அது போன்ற ஒரு சாதனையை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பாலிவுட்டை மிரட்டிய பாகுபலி

பாலிவுட்டை மிரட்டிய பாகுபலி

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியான பாகுபலி திரைப்படம் பாலிவுட் படங்களின் வசூலை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலேயே 1500 கோடி வசூல் ஈட்டிய முதல் திரைப்படமாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர்கள் படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

வசூல் வேட்டையாடிய கே.ஜி.எஃப்

வசூல் வேட்டையாடிய கே.ஜி.எஃப்

பாகுபலியை தொடர்ந்து கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி காரணமாக, அதன் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர்களான ரவீணா டான்டன் மற்றும் சஞ்சய் தத் நடித்து வருகின்றனர் விரைவில் இரண்டாம் பாகமும் இந்திய அளவில் வசூல் வேட்டை நடத்த உள்ளது.

விஜய் தி மாஸ்டர்

விஜய் தி மாஸ்டர்

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் இந்தியிலும் வெளியாக உள்ளது. விஜய் தி மாஸ்டர் என்கிற டைட்டிலுடன் இந்தியில் வெளியாக உள்ள தளபதி விஜய் படம் வசூல் வேட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த எந்த மொழிகளில்

எந்த எந்த மொழிகளில்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வட இந்தியாவிலும் வசூலை குவிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. B4U மோஷன் பிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் மாஸ்டர் திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ வெளியிடுகிறார்.

50 மில்லியன்

50 மில்லியன்

தீபாவளிக்கு வெளியான மாஸ்டர் படத்தின் அதிரடியான டீசர் ஒரே மாதத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் டிரைலர் வரும் புத்தாண்டு பண்டிகைக்கு வெளியாகும் என்றும் அடுத்த சாதனையை எப்படி செய்யலாம் என விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X