விஜய் சேதுபதியின் பிறந்தநாளுக்கு வெளிவருது..மாஸ்டர் இரண்டாம் போஸ்டர்
சென்னை: மாஸ்டர் படத்தின் இரண்டாம் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 14ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தளபதி 64 என்று அழைத்து வந்த படத்தலைப்பை தற்போது மாஸ்டர் என்று அழைக்க துவங்கி விட்டார்கள். புத்தாண்டிற்கு முந்தைய நாள் மாலை மாஸ்டர் என்ற பெயரில் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

இதன் இரண்டாம் போஸ்டர் இரவு 12 புத்தாண்டுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்தார்கள் ஆனால் போஸ்டர் வெளியாக வில்லை இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து இரண்டாவது பார்வை எப்போது வரும் என தயாரிப்பு நிறுவனத்தை சமூக வலைத்தளங்களின் மூலம் பலர் கேட்க தொடங்கிவிட்டனர்.
தற்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம், அதிகாரப்பூர்வ தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவுள்ளது. மாஸ்டர் படத்தின் இரண்டாம் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 14ந் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைந்தாலும், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி மாறுபட்ட நடிகர் ஒரு புறம் ஹீரோவாக நடித்து கொண்டே மறுபுறம் வில்லனாக நடிக்கும் திறன் படைத்தவர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பெண்ணாகவும், சீதக்காதி படத்தில் வயதான தாத்தாகவும் துணிச்சலுடன் நடித்து அசத்தி இருப்பார்.
மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை அடுத்து மாளவிகா மோகனன், ஆன்டனி வர்கீஸ், அர்ஜீன் தாஸ், சாந்தனு, ஆன்ட்ரியா, ஶ்ரீமன், சஞ்சீவ், ஶ்ரீநாத், சேத்தன்,ரம்யா சுப்ரமணியம் மற்றும் கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் .
மாஸ்டர் படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களுக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். படத்தை சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











