இந்த ஆண்டு ஹாஷ்டேக் டாப் 10ல் இடம்பிடித்த ஒரே சினிமா ஹாஷ்டேக் மாஸ்டர் தான்.. மாஸ் காட்டிய விஜய்!
சென்னை: இந்த ஆண்டு ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளில் டாப் 10 இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
வலிமை அப்டேட் கேட்டு அத்தனை முறை ஹாஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்தாலும், இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஹாஷ்டேக் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஹாஷ்டேக் தானாம்.
சமூக வலைதள கிங்காக கலக்கும் விஜய்யை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாத்தி ரெய்டு
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடிக் கிடந்த நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. சூர்யாவின் சூரரைப் போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படங்கள் அப்போதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஒடிடி தளத்திலேயே ரிலீஸ் ஆகின. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை வாத்தி ரெய்டு மூலமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரவழைத்தது.

டாப் 10 ஹாஷ்டேக்
ட்விட்டரில் நாளுக்கொரு ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடர்பான #Covid19 ஹாஷ்டேக் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. விவசாயிகள் போராட்டம், டீம் இந்தியா, டோக்கியா 2020, ஐபிஎல் 2021, இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி, தீபாவளி, மாஸ்டர், பிட் காயின் மற்றும் #PermissionToDance உள்ளிட்ட 10 ஹாஷ்டேக்குகள் தான் டாப் 10 ஹாஷ்டேக் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஒரே சினிமா ஹாஷ்டேக்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகி உள்ளன. வரும் ஆண்டு ரிலீஸ் ஆக காத்திருக்கும் படங்களான வலிமை, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் ஹாஷ்டேக்குகளும் இந்த ஆண்டு டிரெண்டாகின. ஆனாலும், ட்விட்டர் இந்தியா டாப் 10ல் இடம்பிடித்த ஒரே சினிமா ஹாஷ்டேக் என்கிற பெருமையை தளபதி விஜய்யின் #Master தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சாதிக்கும் விஜய்
2017ம் ஆண்டு தளபதி விஜய்யின் மெர்சல் ஹாஷ்டேக் இடம்பெற்று இருந்தது. 2018ம் ஆண்டு சர்கார் ஹாஷ்டேக், 2019ம் ஆண்டில் பிகில் ஹாஷ்டேக், 2020 மற்றும் 2021ல் மாஸ்டர் ஹாஷ்டேக் இடம்பெற்றுள்ளது என தளபதி ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் உடன் தெறிக்க விட்டு வருகின்றனர்.

பீஸ்ட் ஹாஷ்டேக்கும்
தளபதி விஜய் பதிவிட்ட #Beast ஃபர்ஸ்ட் லுக் அதிகமாக லைக் செய்யப்பட்டும் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்காக மாறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மாஸ்டர் பிடித்த இடத்தை அடுத்த ஆண்டு பீஸ்ட் ஹாஷ்டேக் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











