3 நாட்களில் 100 கோடி.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. டிரெண்டாகும் #Master100CRin3days

சென்னை: 50 சதவீத இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் 3 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக #Master100CRin3days ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 25 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இரண்டாவது நாள் வசூல் 40 கோடி என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் விடுமுறை

பொங்கல் விடுமுறை

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் என இரண்டு படங்கள் மட்டுமே இந்த பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகி உள்ளன. அதிலும், மாஸ்டர் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் பொங்கல் விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொண்டு வசூல் சாதனை செய்து வருகிறது மாஸ்டர் திரைப்படம்.

50 கோடிக்கும் மேல்

50 கோடிக்கும் மேல்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 15 கோடி ரூபாய் வசூலும், வெள்ளிக்கிழமையான நேற்று 20 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 நாட்களில் 100 கோடி

3 நாட்களில் 100 கோடி

உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 3 நாட்களில் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Master100CRin3days என்ற ஹாஷ்டேக்கும் அதை தொடர்ந்து டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

9வது படம்

9வது படம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் முதல் முறையாக 100 கோடி வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து, கத்தி, புலி, தெறி, மெர்சல், பைரவா, சர்கார், பிகில் மற்றும் மாஸ்டர் என மொத்தம் 9 விஜய் படங்கள் 100 கோடி வசூல் கிளப்பில் இதுவரை இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செக்கட் ஷர்ட்

செக்கட் ஷர்ட்

நம்மவர், மாஸ்டர் அடுத்ததாக கோப்ரா கோலிவுட்டின் வாத்தியார்கள் என்றாலே செக்கட் ஷர்ட் தான் தரமான அடையாளமாக மாறி உள்ளது என்று போடப்பட்டுள்ள இந்த மீமும் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்துள்ள இந்த சட்டை பொங்கல் விற்பனையிலும் அமோகமாக விற்பனையானது.

தமிழ்நாட்டிலும் தாண்டும்

தமிழ்நாட்டிலும் தாண்டும்

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 60 கோடி வசூலை மாஸ்டர் திரைப்படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேலும் வசூல் குவியும் என்பதால், மிக விரைவில் தமிழ்நாட்டிலும் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸை மாஸ்டர் படம் அள்ளுவது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X