60 மில்லியன் வியூஸ்.. விஜய்யின் மாயக் குரல்.. குட்டி ஸ்டோரி செய்த இன்னொரு சாதனை!

சென்னை: தளபதி விஜய் ஒரு பாட்டு பாடினாலே, அந்த பாடல் வெறித்தனமாக ஹிட் ஆகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்த குட்டி ஸ்டோரி.

கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மாஸ்டர்.

அனிருத் இசையில், ஃபர்ஸ்ட் சிங்கிளாக ரிலீசான குட்டி ஸ்டோரி பாடலை கனா இயக்குநர் அருண் ராஜா காமராஜ் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி பிறந்தநாள்

தளபதி பிறந்தநாள்

தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வருகிறது. அதனை கோலாகலமாக கொண்டாட விஜய் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். லாக்டவுன் முடியும் தருவாயில் இருப்பதனால், சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி, பொதுமக்களுக்கு சேவை செய்யும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விஜய் – விஜய்சேதுபதி காம்போ

விஜய் – விஜய்சேதுபதி காம்போ

மாதவன் - விஜய்சேதுபதி காம்போவை விக்ரம் வேதா படத்தில் பார்த்த ரசிகர்கள் வியந்து போன நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் - விஜய்சேதுபதி காம்போவை பேட்ட படத்தில் காட்டியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அடுத்தபடியாக தற்போது விஜய் - விஜய்சேதுபதி காம்போவை வேற லெவலில் கொடுக்க லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை மெர்சலாக எடுத்துள்ளார்.

60 மில்லியன்

60 மில்லியன்

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக விஜய்யின் மாயக் குரலில் பாசிட்டிவ் கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய பாடலாக குட்டி ஸ்டோரியின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் உருவான அந்த பாடல் தற்போது 60 மில்லியன் வியூஸ்களை பெற்று புதிய மைல் கல்லை தொட்டு இருக்கிறது.

1.6 மில்லியன் லைக்ஸ்

1.6 மில்லியன் லைக்ஸ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் டீசர் 2.1 மில்லியன் லைக்குகளை பெற்று பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டீசர் லைக்குகளை பின்னுக்குத் தள்ளிய நிலையில், குட்டி ஸ்டோரி பாடல் தற்போது 1.6 மில்லியன் லைக்குகளுடன் இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற பாடல் வரிசையில் முன்னேறி வருகிறது.

டீசர் அல்லது டிரைலர்

டீசர் அல்லது டிரைலர்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழு டீசர் அல்லது டிரைலர் இரண்டில் ஏதாவது ஒன்றை நிச்சயம் வெளியிடுவார்கள் என்றும், அப்படி அது வெளியானால், இந்தியளவில் பல முந்தைய சாதனைகளை முறியடிக்க தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்து செய்யுங்க லோகேஷ் கனகராஜ் பிரதர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X