Just In
- 3 min ago
காந்தி டாக்ஸ்..கமல் படத்துக்குப் பிறகு இதுதான்..பாலிவுட்டில் உருவாகும் மவுனப் படத்தில் விஜய் சேதுபதி
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
Don't Miss!
- News
விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி ஸ்டோரி பாடல் உலகளவில் டிரெண்டாகி வரும் வார்த்தை, வெறும் சும்மா சொல்றது இல்லைங்க.. நிஜமாவே, உலகளவில் தான் டிரெண்டாகி வருகிறது.
தாய்லாந்து பள்ளி மாணவர்கள் குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரியாக்ஷன் கொடுத்த வீடியோ வைரலான நிலையில், தற்போது, பிலிப்பைன்ஸ் நாட்டு விமான நிலையத்தில், குட்டி ஸ்டோரி பாடலுக்கு, ஆண்கள், பெண்கள் என சில இளைஞர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம்.. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமலுக்கு போலீஸ் சம்மன்!

எல்லாம் யாரால
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் வரும் சம்மருக்கு திரைக்கு வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான குட்டி ஸ்டோரி காதலர் தினத்தன்று வெளியானது. அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாட்டு 18 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.
|
கத்தி ஸ்டைல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படத்தில் அனிருத் இசையில் உருவான பக்கம் வந்து பாடலில், இதே போல் தான் நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் நடனமாடி இருப்பார். தற்போது, கத்தி பட ஸ்டைலில், பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில், தளபதி ரசிகர்கள் இந்த பாட்டுக்கு நடனமாடி உள்ளனர்.
|
தாய்லாந்து பள்ளியில்
பிலிப்பைன்ஸ் நாட்டு விமான நிலையத்தில், சில இளைஞர்கள் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்னதாக, தாய்லாந்து பள்ளியில், குட்டி ஸ்டோரி பாடலை போட்டு, அந்நாட்டு மாணவ மாணவிகள் அந்த பாடலுக்கு கொடுத்த ரியாக்ஷன் வீடியோவை அனிருத் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
|
தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்தை
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் நடனமாடிய குழுவின், நடன அசைவுகள் செம மாஸாக இருக்கிறது என்றும், இந்த பாட்டுக்கு கொரியோகிராஃபி பண்ண அந்த தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
சூப்பர் கொரியோகிராஃபி
ஆரம்பத்தில் இருந்தே, டாப் ஆங்கிளில் காட்டியபடி, வீடியோ அட்டகாசமான ஓபனிங் கொடுத்திருக்கிறது. மேலும், நடனமாடும் மூன்று இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அனிருத்தின் தாளத்திற்கு ஏற்ப அருமையான நடன அசைவுகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், இந்த நடனத்தின் கொரியோகிராஃபி சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
|
மாஸ்டர் ராஜ்ஜியம்
நடிகர் விஜய் பாடும் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்களாகவே மாறியுள்ளன. ஒய் திஸ் கொலவெறி பாடலை தொடர்ந்து, ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு, உலகளவில் வரவேற்பு கிடைத்துள்ளன. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் யூடியூப் சேனல்களிலும், இந்த பாடல் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

செகண்ட் சிங்கிள் எப்போ?
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி ஸ்டோரி வெளியாகி, பலருக்கும் பாசிட்டிவிட்டியை பரப்பி வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் உலாவின. ஆனால், இதுவரை மாஸ்டர் படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீக்கிரமே அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.