ப்ளீஸ்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. இதுக்கு மேல முடியல.. மேடையில் கதறி அழுத மாஸ்டர் மகேந்திரன்!

சென்னை: 33 வயதானாலும் தன்னை இன்னமும் "நாட்டாமை" படத்தில் நடித்த சிறுவனாகவே பார்க்கின்றனர் என மாஸ்டர் மகேந்திரன் வருத்தப்பட்டு பேசியுள்ளார். மேலும், தியேட்டர்கள் எல்லாம் இனிமேல் இருக்காதா? என்கிற பயத்தையே திடீரென காட்டி விட்டனர். இனிமேல், ஓடிடியில் தான் படங்கள் வரும் என சொல்லும் போது மனம் உடைந்து அழுதுட்டேன் என மேடையிலேயே மாஸ்டர் மகேந்திரன் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

1994ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் நாட்டாமை படத்தில், "ஆமாம்.. நான் பார்த்தேன்" என சாட்சி சொல்லும் சிறுவனாக நடித்து அறிமுகமானவர் தான் மாஸ்டர் மகேந்திரன். அந்த படத்தைத் தொடர்ந்து பாண்டியராஜன் உடன் இணைந்து அவர் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே படம் அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழ்நாடு விருதை பெற்றுத் தந்தது.

Master Mahendran cried on stage recently his Amigo Garage press meet

மாஸ்டர் மகேந்திரன்: பெண் குழந்தை நட்சத்திரங்களை பேபி என்றும் ஆண் குழந்தை நட்சத்திரங்களை மாஸ்டர் என்றும் அடைமொழி வைத்து அவர்களுக்கு உரிய மரியாதையை தமிழ் சினிமா அந்த காலத்தில் இருந்தே வழங்கி வருகிறது. பரம்பரை, கோயமுத்தூர் மாப்பிள்ளை, மாப்பிள்ளை கவுண்டர், காதலா காதலா, கோபாலா கோபாலா உள்ளிட்ட பல படங்களில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து அசத்தி உள்ளார்.

குட்டி பவானி: 2013ம் ஆண்டு வெளியான விழா படத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வந்தாலும் மாஸ்டர் மகேந்திரனுக்கு பெரிதாக படங்கள் ஓடவில்லை. என்றுமே ஆனந்தம், விந்தை, திட்டி வாசல், விரைவில் இசை, நாடோடி கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக அவர் விஜய்சேதுபதியின் வாலிப பருவ கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி எடுத்தார்.

லேபில் வெப்சீரிஸ்: மாஸ்டர் படத்திற்கு பிறகு சிதம்பரம் ரயில்வே கேட், நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, மாறன், ரிப்பப்பரி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் எதுவும் பெரிதாக ஓடவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜெய் நடிப்பில் வெளியான லேபில் வெப்சீரிஸை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். அந்த வெப்சீரிஸில் மாஸ்டர் மகேந்திரன் வடசென்னை இளைஞராக அந்த வெப்சீரிஸில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதிகளவில் இடம்பெற்ற ஆபாச வசனங்களால் ரசிகர்களுக்கு அந்த வெப்சீரிஸை பெரிதாக பிடிக்காமல் போய் விட்டது.

Master Mahendran cried on stage recently his Amigo Garage press meet

மேடையில் அழுத மகேந்திரன்: அடுத்ததாக "அமிகோ கராஜ்" எனும் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் வாரம் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில் கலந்து கொண்டு பேசிய மாஸ்டர் மகேந்திரன் மேடையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தி அழுதது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தியேட்டர் இல்லைன்னா அவ்ளோதான்: கொரோனா காலத்தில் தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்டன. எல்லாரும் ஓடிடிக்காக படம் எடுக்க ஆரம்பித்தனர். நாம தியேட்டருக்காக படம் பண்ணுவோம் என முயற்சி செய்து இந்த படத்தில் நடித்து முடித்தேன். ஆனால், வழக்கம் போல மாஸ்டர் மகேந்திரன் படமா? என ஒரு முத்திரை குத்த ஆரம்பித்து விட்டனர். 3 வருஷம் ஆகிவிட்டது இந்த படத்தை தேற்றி தியேட்டருக்கு கொண்டு வர, எனக்காக படம் பார்க்க வேண்டாம். இந்த படத்துக்காக என்னையும் தாண்டி பலர் உழைத்துள்ளனர். மலையாள படங்களுக்கு எல்லாம் வரவேற்பு இங்கே கிடைக்கிறது. இந்த மகேந்திரன் படத்தை ஒரு 2 மணி நேரம் செலவு செய்து பாருங்கள் என கெஞ்சிக் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X