அத நினச்சா தான் பயமா இருக்கு...தனுஷ் படம் பற்றி புலம்பும் மகேந்திரன்
சென்னை : கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரனும் நடிக்க உள்ளதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. ஆனால் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் ரசிகர்களை நினைத்து பயமாக இருப்பதாக மகேந்திரன் புலம்பி உள்ளார்.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ,தங்களின் விருப்ப நடிகர்கள் மற்றும் அவர்கள் நடிக்கும் படங்கள் குறித்தும் ரசிகர்கள் அப்டேட்களை கேட்பது அதிகரித்து வருகிறது. இதே போன்று மாஸ்டர் படத்திற்கு முன்பும் அதன் அப்டேட் பற்றி மகேந்திரனிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
ரசிகர்களின் அன்பு தொல்லையை தாங்க முடியாமல் மகேந்திரனும் சில விஷயங்களை கூறினார். இப்போது தனுஷின் ரசிகர்களும் டி 43 பற்றிய அப்டேட்களை மகேந்திரனிடம் கேட்க தயாராகி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களை விட அதிகமாக டார்ச்சர் பண்ண ரெடியா இருங்கனு தனுஷ் ரசிகர் ஒருவர் பதிவிட்டதற்கு பதில் அளித்த போது தான், அதை நினைத்தால் பயமாக உள்ளதாக மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பி உள்ளார். தனுஷ் ரசிகர்கள் சிலர் ஏற்கனவே டி 43 அப்டேட் பற்றி கேட்டு வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மகேந்திரன். இதனாலேயே அவர் மாஸ்டர் மகேந்திரன் என இப்போது வரை அழைக்கப்படுகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஜூனியர் விஜய் சேதுபதியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் ரொம்பவே இடம்பிடித்து விட்டார் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











