Vijay: அரசியலுக்காக விஜய் மக்களை சந்திக்கிறாரா?.. மாஸ்டர் மகேந்திரன் என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: அரசியலுக்காகத்தான் நடிகர் விஜய் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை செய்தார் என்றும் இதற்கு முன்னதாக அவர் எந்தவொரு உதவியையும் செய்யவில்லை என மாஸ்டர் மகேந்திரன் நடத்திய பிரஸ் மீட்டில் சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் மகேந்திரன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து மாஸ் காட்டியிருப்பார் மகேந்திரன். அதன் பின்னர் சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான லேபில் வெப்சீரிஸில் வடசென்னை இளைஞராக நடித்திருப்பார். அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் மகேந்திரன்.

அரசியலில் விஜய்: நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களை முடித்து விட்டுக் கூட இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் கட்சியை அறிவித்து இருக்கலாம். ஆனால், 2 ஆண்டுகளாவது அரசியல் களத்தில் இருந்து விட்டு வரும் பிரச்சனைகள், விமர்சனங்களை எதிர்கொண்டு சட்டமன்ற தேர்தலை 2026ம் ஆண்டு சந்திக்க வேண்டும் என்று தான் இப்பவே தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்துள்ளார் விஜய்.
அலைகடலாக திரளும் ரசிகர்கள்: பாண்டிச்சேரியில் தான் கோட் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. மீசை இல்லாத லுக்கில் தான் தொடர்ந்து நடிகர் விஜய் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தொடர்ந்து ரசிகர்களை கேரவன் மீது ஏறி நின்று சந்தித்தும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தும் அவர்கள் வீசும் மாலைகளை அணிந்துக் கொண்டு மீண்டும் ரசிகர்களுக்கே அவற்றை கொடுத்தும் மாஸ் காட்டிவருகிறார். அலைகடலாக திரண்டு ரசிகர்கள் பாண்டிச்சேரியில் விஜய்யை சந்திக்க காத்திருக்கும் காட்சிகளும் விஜய்யை சந்தித்த உற்சாகத்தில் அவர்கள் கூச்சலிடும் காட்சிகளும் பல அரசியல் தலைவர்களையும் பயம் கொள்ளச் செய்திருக்கும்.
மாஸ்டர் மகேந்திரனிடம் கேள்வி: விஜய் அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன என ரஜினிகாந்த் முதல் மாஸ்டர் மகேந்திரன் வரை யாரை சந்தித்தாலும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போதைக்கு ஹாட் டாப்பிக்கே விஜய் தான் என்பதால், அந்த கேள்வி அத்தியாவசிய கேள்வியாகவும் மாறிவிட்டது. மாஸ்டர் மகேந்திரனிடம் சமீபத்தில் நடைபெற்ற அவருடைய படத்தின் பிரஸ்மீட்டில் ஒரு பத்திரிகையாளர் அரசியலுக்காகத்தான் விஜய் மக்களை சந்திக்கிறாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.
மின்சார கண்ணா படத்துல இருந்து பார்க்கிறேன்: விஜய் அண்ணாவை நான் மின்சார கண்ணா படத்தில் இருந்தே பார்க்கிறேன். அந்த படத்தின் சூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. அப்போ, நான் சின்ன பையன். விஜய் அண்ணாவை பார்க்க காலையில் இருந்தே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், யாரையும் உதவியாளர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு ஆர்ட்டிஸ்ட் வந்து விஜய் அண்ணாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, தனது உதவியாளர்களை பிடித்து திட்டி விட்டார் விஜய் அண்ணா. அதன் பின்னர், ரசிகர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினார்.
நிறைய உதவி செய்கிறார்: இப்போதான் விஜய் அண்ணா உதவி செய்யுறாருன்னு நீங்க சொல்றீங்க, அவர் ரொம்ப வருஷமாகவே ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார். அவரோட மனசு எனக்கு நல்லாவே தெரியும். சும்மா பேச்சுக்கெல்லாம் அவரை பற்றி இப்படி பேசக் கூடாது என பொங்கி விட்டார் மாஸ்டர் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











