சிக்ஸ்பேக் புகைப்படத்தை பதிவிட்ட மாஸ்டர் மகேந்திரன்.. உள்ளாடை குறித்தகமெண்ட்டுக்கு செம ரிப்ளை!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இளம் வயது பவானியாக நடித்து மிரட்டி இருந்தார்.
கடினமான வொர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து அசத்திய அவர், ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு சில நெட்டிசன்கள் பதிவிட்ட வில்லங்கமான கமெண்ட்டுகளுக்கு செம கூலாக பதில் அளித்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

எப்பவுமே மாஸ்டர் தான்
குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக சுமார் 28 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகர் மகேந்திரன் அப்பவும் இப்பவும் எப்பவுமே மாஸ்டர் மகேந்திரனாகவே வலம் வருகிறார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இளம் வயது பவானியாக வெறித்தனம் காட்டி இருந்தார்.

சிக்ஸ்பேக் கோரிக்கை
மாஸ்டர் மகேந்திரனின் சிக்ஸ் பேக் போட்டோவை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் சிலர் அன்பு கோரிக்கை வைத்த நிலையில், தனது சிக்ஸ்பேக் புகைப்படத்தை பதிவிடுகிறேன் என கோவா கடற்கரையில் எடுத்த த்ரோபேக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

உள்ளாடை கமெண்ட்
அந்த புகைப்படத்தில் சிக்ஸ் பேக் உடன் சேர்த்து மாஸ்டர் மகேந்திரன் அணிந்திருந்த உள்ளாடையும் தெரிய, அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், இந்த பிராண்ட் இன்னர் தான் ப்ரோ நான் யூஸ் பண்றேன் என கிண்டலாக கமெண்ட் செய்ய, அன்னைக்கு அதுதான்மா கிடைச்சது என மாஸ்டர் மகேந்திரனும் செம கூலாக ரிப்ளை செய்துள்ளார். உள்ளாடை குறித்த ஜாலியான விவாதமே கமெண்ட் செக்ஷனில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

வெஜிடேரியன் பஞ்சாயத்து
கோவா, த்ரோபேக், வெஜிடேரியன் என டேக் போட்டு இந்த போட்டோவை போட்டுள்ள மாஸ்டர் மகேந்திரனை பார்த்து நெட்டிசன் ஒருவர், இப்படி வெஜிடேரியன்னுலாம் போடுவது தேவையில்லாத ஆணி என வம்பிழுத்தார். ஆனால், அதற்கும் செம கூலாக உங்களுக்கு பாக்குறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். சரிப்பா.. உங்களுக்காக அடுத்த முறை இப்படி போட மாட்டேன் என கமெண்ட் போட்டு கெத்துக் காட்டி உள்ளார்.

டி43 அப்டேட்
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்து வரும் டி43 படத்திலும் மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜாலியாக ட்விட்டரில் உரையாடி வரும் மாஸ்டர் மகேந்திரனிடம் டி43 அப்டேட் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்ப, சத்தமே காட்டாமல் கிளம்பி விட்டார் மாஸ்டர் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











