தனுஷ் படத்தில் இணைந்த குட்டி பவானி... மிரட்டும் லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை : மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து மிரட்டியிருந்த மாஸ்டர் மகேந்திரன் இப்போது தனுஷ் படத்தில் இணைந்துள்ளார்.
பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் சக்கை போடு போட்டு வந்த நிலையில் அதில் விஜய், விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களுக்கு இணையாக மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தனுஷின் 43வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய வர அதில் இப்பொழுது குட்டி பவானி மகேந்திரன் இணைந்துள்ள என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுஸ்புல் காட்சிகளாக
ஆரவாரமில்லாத படங்களை எடுத்து அதை பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையால் நனைய வைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் இயக்கியிருந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. நீண்ட இழுபறிக்குப் பிறகு பல தடைகளை தாண்டி இந்த படம் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக இன்றும் ஓடிக் கொண்டுள்ளது.

சிறு வயது
ஹீரோவுக்கு இணையாக வில்லன் இருந்தாலே அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடும் என்பதை மற்றுமொருமுறை நிரூபித்திருக்கிறது மாஸ்டர் படம். அந்த வகையில் ஹீரோவுக்கு இணையாக விஜய் சேதுபதியின் பவானி பாத்திரத்தையும் செதுக்கி இருந்த லோகேஷ் கனகராஜ் இதில் சிறு வயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரனை நடிக்க வைத்திருந்தார்.

குட்டி பவானி
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அனைவரிடத்திலும் நற்பெயரை எடுத்த மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு வெற்றி கூட அவருக்கு அமையவில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரம் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

தனுஷின் 43வது திரைப்படத்தில்
விஜய் சேதுபதியின் வெறித்தனமான நடிப்புக்கு இணையாக குட்டி பவனியாக நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரன் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட நிலையில், பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இப்பொழுது தனுஷின் 43வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்திக் நரேன் உறுதிப்படுத்தியுள்ளார்
தனுஷ்,மாளவிகா மோகனன், மூக்குத்தி அம்மன் ஸ்முருதி வெங்கட், சூரரை போற்று கிருஷ்ணகுமார் என பலர் நடித்து வரும் தனுஷ் 43வது திரைப்படம் முதல் பாதி படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் குட்டி பவானி மகேந்திரன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் உறுதிப்படுத்தியுள்ளதை அடுத்து தரமான சம்பவம் காத்திருக்கிறது என கோலிவுட்டே வெய்ட்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











