மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பல பிரபலங்களின் பிறந்தநாள் வரிசையாக கொண்டாடப்பட்டு வரும் இதே மாதத்தில் தான் மாஸ்டர் மகேந்திரனும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

31 வயதாகியும் இன்னமும் மாஸ்டர் மகேந்திரன் என்றே ரசிகர்கள் அவரை அழைத்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் மகேந்திரன் பர்த்டே

மாஸ்டர் மகேந்திரன் பர்த்டே

3 வயதில் நாட்டாமை படத்தில் "நான் பார்த்தேன்" என சாட்சி சொல்லும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மாஸ்டர் மகேந்திரன் 6 மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் தங்கள் வீட்டு குழந்தையாகவே பார்க்கப்படும் நடிகர் மகேந்திரனின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

குட்டி பவானி

குட்டி பவானி

கோயம்பத்தூர் மாப்பிள்ளை, கும்பகோணம் கோபாலு, படையப்பா, மின்சார கண்ணா, மாயி என ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கிய மகேந்திரன் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் ஜூனியர் விஜய்சேதுபதியாக நடித்து மெர்சல் காட்டி இருந்தார்.

மாறன் படத்திலும்

மாறன் படத்திலும்

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்திலும் மாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிறப்பான நடிப்பு திறமையை கொண்டுள்ள மகேந்திரன் பல ஆண்டுகளாக ஹீரோவாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

ரிப்பப்பரி

ரிப்பப்பரி

இயக்குநர் ஏகே (இன்னொரு ஏகேவா) எனும் அருண் கார்த்திக் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரிப்பப்பரி என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் படமும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Recommended Video

அவர் மட்டும் இல்லைன்னா என் நெலம | ACTOR MAHENDRAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL
லோகேஷ் கனகராஜ் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் வெளியீடு

மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு நடிகர் மகேந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். "புதுமாப்பிள்ளைக்கு ரிப்பப்பரி" எனும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் வரியான ரிப்பப்பரியை டைட்டிலாக வைத்துள்ள நிலையில், படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X