எவன் வேணா வரட்டும்.. மாஸ்டர் மிரட்டும்.. மாஸ்டர் செகண்ட் லுக் ரிலீஸ்.. தளபதி ரசிகர்கள் ஹேப்பி!

Recommended Video

Master Second Look poster | Master 2020 | ThalapathyVijay

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதி லுக் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தளபதி புள்ளிங்களுக்கு பொங்கல் பரிசாக விஜய் இருக்கும் மாஸான செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் ட்வீட்

நியூ இயரை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தின் மாஸான செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். தளபதி ரசிகர்களுக்கு தரமான பொங்கல் பரிசு கிடைத்துள்ளது.

ரத்னகுமாருக்கு வார்னிங்

இந்த லுக் எனக்கு வார்னிங் கொடுப்பது போல இருக்கு கோபி பிரசன்னா, மாஸ்டர் அப்டேட்ஸ் சொல்லாம இருக்க தளபதி உத்தரவு போடுவது போல் இருக்கிறது என ரத்னகுமார் அந்தர் ட்வீட் போட்டுள்ளார்.

பொங்கல் விருந்து

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் சாந்தனு பொங்கல் சிறப்பு விருந்து என இந்த போஸ்டரை புகழ்ந்துள்ளார்.

மூடிட்டு இருக்கணும்

எவனா இருந்தாலும் தளபதி முன்னாடி மூடிட்டு தான் இருக்கணும் என்பதை செகண்ட் லுக் போஸ்டர் தெரிவிக்கிறது என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

சும்மா கிழி

கருப்புத் தோலோட சிங்கம் வரும் சீனோட இடமே பத்திக்கும் அந்த மாதிரி சும்மா கிழி என தர்பார் பாடலை போட்டு இந்த ரசிகர் வெறித்தனமாக ட்வீட் போட்டுள்ளார்.

பிகில் போடு

மாஸ்டர் செகண்ட் லுக் ரிலீசாகியுள்ள நிலையில், பிகில் போடு என்றும் தளபதி விஜய்க்கு பொங்கல் வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உஷ்ஷ்

வாயில் விரல் வைத்து காலெஜ் புரொபஸர் லுக்கில் விஜய் இருக்கும் மாஸ் செகண்ட் லுக் போஸ்டர் பார்த்து ரசிகர்கள்.. உஷ்ஷ் என கமெண்ட் செய்து தெறிக்கவிடுகின்றனர்.

மாஸ்டர் மிரட்டும்

யாரு வேணா வரட்டும்.. மாஸ்டர் மிரட்டும் என இந்த ரசிகர் மரண மாஸாக கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X