மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக்? ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை
Recommended Video
சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி என்ற வீடியோ க்ளிப் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் மணல் அள்ளும் சவுடை வைத்து எதிரிகளை பயங்கரமாக தாக்குவது போன்று இருக்கும் அந்த வீடியோவை பகிர வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

டிராக் லிஸ்ட்
கத்தி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பாடல்கள் ஏதுமின்றி அந்த படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், 5 பாடல்கள், 4 தீம் மியூசிக் என மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது.

விஜய்சேதுபதி
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி கெத்தாக நடந்து வரும் வீடியோ ஒன்று லீக்காகி படக்குழு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை மிகவும் அப்செட் செய்தது. இந்நிலையில், தற்போது அடுத்ததாக ஒரு சண்டை காட்சி வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளதாக ஒரு வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது.
மாஸ்டர் காட்சி தானா?
ஆனால், அது மாஸ்டர் படத்தின் காட்சியா? என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. ஏனென்றால், அந்த மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பில் விஜய்யின் முகம் சரிவர தெரியவில்லை. இது மாஸ்டர் படத்தின் காட்சி என்று சிலர் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இது மாஸ்டர் படத்தின் காட்சி அல்ல என்று சில ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.

கிளைமேக்ஸ் காட்சி
விஜய் - விஜய்சேதுபதி மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பிப்ரவரி மாத இறுதியில் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். கைதி படத்தை போலவே மாஸ்டர் படத்தின் சண்டை காட்சிகளும் வெறித்தனமாக இருக்கும் என்பதற்கு சமீபத்தில் வெளியான மாஸ்டர் 3வது லுக் போஸ்டரே சாட்சியாக உள்ளது.
ஷேர் செய்ய வேண்டாம்
லீக்கான சண்டை காட்சி மாஸ்டர் படத்தின் காட்சியா இல்லையா என்ற குழப்பத்திற்கு நடுவே அந்த காட்சியை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ராவாக இருக்கும் அந்த சண்டைக் காட்சியை பார்த்த தளபதி ரசிகர்கள் சிலர், ஏப்ரல் மாதம் தரமான சம்பவம் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











