Vijay - ரசிகருக்காக மாஸ்டர் மகேந்திரன் வைத்த கோரிக்கை - நிறைவேற்றுவாரா விஜய்?
சென்னை: Vijay (விஜய்) மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவருக்காக நடிகர் மகேந்திரன் வைத்த கோரிக்கையை நடிகர் விஜய் நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கிறார். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது திறமையின் துணையோடு இப்போது முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார். மேலும் மிகப்பெரிய வியாபாரம் அவரது படங்களுக்கு நடக்கிறது. இதனால் அவரை நம்பி எவ்வளவு கோடி ரூபாய் வேண்டுமானாலும் பணத்தை செலவழிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் லியோ: விஜய் கடைசியாக நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூழலில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவுக்கு 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் செலவழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு பட்ஜெட்டில் ஒரு படம் உருவாவது விஜய்யின் கேரியரில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீரில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் முடிந்த சூழலில் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு அதில் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. மேலும் அவுட்டோர் ஷூட்டிங் இனி வேண்டாம் என விஜய் கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.
லியோவில், த்ரிஷா, மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
விஜய்யை காண ரசிகர்கள் ஆவல்: விஜய் படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்டுக்குள் எங்கு நடந்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமான விஷயம். அவரை ஒருமுறையேனும் பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலோடு காத்திருப்பார்கள். ஆனால் லியோ ஷூட்டிங் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது பையனூரில் நடந்து வரும் ஷூட்டிங்கிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி ரசிகர்: இந்நிலையில் மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்த மகேந்திரன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்யும் ஒரு மாற்றுத்திறனாளியை அறிமுகப்படுத்தி"சம்பாதிக்க கை கால்லாம் ஒரு மேட்டரே இல்லை. மூளையும், இதயமும் பலமாக இருந்தாலே போதும் னும் ஹார்ட்டும் மைண்டும் ஸ்டராங்கா இருந்தாலே போதும்" என கூறினார்.
விஜய் ரசிகர்: மேலும் அந்த மாற்றுத்திறனாளி விஜய்யின் தீவிர ரசிகர் என கூறும்போது, அந்த ரசிகர் ஒருமுறையாவது விஜய்யை நேரில் சந்தித்துவிட வேண்டும் என கேட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசையை நடிகர் விஜய் விரைவில் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு இளம்பெண் விஜய் வீட்டின் முன் அழுதபடி நின்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











