இவ்ளோ பெரிய படமா? வைரலாகும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்ட்டிஃபிகேட்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!

சென்னை: மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான 'மாஸ்டர்' திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பிசினஸ் பேசி முடிக்கப்பட்டன.

ஆனால் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

படக்குழு திட்டவட்டம்

படக்குழு திட்டவட்டம்

இதனிடையே ஓடிடி தளத்தில் மாஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என திட்டவட்டமாக அறிவித்து வந்தது படக்குழு.

ஜனவரி 13ஆம் தேதி

ஜனவரி 13ஆம் தேதி

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவித்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

படத்தின் ரிலீஸ் தகவல்

படத்தின் ரிலீஸ் தகவல்

ஆனால் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை அறிவித்த கையோடு நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அரசு அனுமதி..

அரசு அனுமதி..

இதனை தொடர்ந்து விஜயின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர். நாள்தோறும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக மாஸ்டர் ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

178.35 நிமிடங்கள்..

178.35 நிமிடங்கள்..

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. அதன்படி படம் 178.35 நிமிடங்கள், அதாவது 2 மணிநேரம் 58 நிமிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ பெரிய படமா என இப்போதே வாயை பிளந்துவிட்டனர்.

9 இடங்களில் கத்தரி

9 இடங்களில் கத்தரி


ஏற்கனவே படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் 9 இடங்களில் காட்சிகளை கத்தரிக்க அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியானது. அதற்கு படக்குழு சம்மதம் தெரிவித்ததால் மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X