Master - மம்மூட்டியின் படத்தை காப்பி அடித்துதான் மாஸ்டர் உருவானதா?.. ரசிகர்கள் விளாசல்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அந்தப் படத்திலிருந்து விஜய்யின் குட் புக்கில் லோகேஷ் கனகராஜ் இணைந்தார். இரண்டு பேரும் இணைந்து லியோ படத்தில் கடைசியாக பணியாற்றினர். சூழல் இப்படி இருக்க மம்மூட்டியின் முத்ரா படத்தின் காட்சிகளை காப்பி அடித்து மாஸ்டர் பட சீன்களை லோகேஷ் உருவாக்கியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது
தலைவர் 171: லியோ திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷ் தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது.
எல்சியூ: லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரது மேக்கிங்கும் திரைக்கதையும். தான் திறமை வாய்ந்த கலைஞர் என்பதை தன்னுடைய முதல் படமான மாநகரத்திலேயே தன்னுடைய மேக்கிங் மூலம் நிரூபித்திருப்பார். அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் எல்சியூவை உருவாக்கி திரைக்கதையில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார்.

ஒர்க் அவுட் ஆகாத எல்சியூ: லோகேஷ் கனகராஜின் பலமாக பார்க்கப்பட்ட எல்சியூவே லியோவில் அவருக்கு சூட்டை கொடுத்திருக்கிறது. கைதி பட கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்ததோ இல்லை படத்தின் க்ளைமேக்ஸில் விக்ரம் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சியோ ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக லியோ திரைப்படத்தை எல்சியூவுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்தாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவருகின்றனர் ரசிகர்கள்.
மாஸ்டர்: இதற்கிடையே விஜய்யுடன் லியோவுக்கு முன்னதாகவே மாஸ்டரில் இணைந்த லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தில் விஜய்யை வேறு மாதிரி காட்டியிருந்தார். சின்ன சின்ன எக்ஸ்பிரெஷன்களில்கூட விஜய்யிடம் வேரியேஷன் தெரிந்தது. ஆனால் அது லியோவில் மிஸ்ஸிங். எனவே விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்ததில் லியோவிட மாஸ்டர்தான் மாஸ்டர் பீஸ் என்று ரசிகர்கள் ஓபனாகவே கூறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
மாஸ்டர் காப்பி: இந்நிலையில் மாஸ்டர் படம் காப்பி அடிக்கப்பட்டது என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூகவலைதளங்களில் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது 1989ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் உருவானதுதான் முத்ரா என்ற திரைப்படம். அதில் வரும் சண்டை காட்சிகள், மாஸ்டர் படத்தின் முதல் காட்சி, ஜெயிலில் சிறுவர்கள் இருக்கும் காட்சி, ஜெயிலுக்குள் தன்னுடைய சக அதிகாரிகளை அடிக்கும் காட்சி என பல காட்சிகள் முத்ரா படத்தில் வந்தது போலவே இருப்பதாக கூறி; இரண்டு பட காட்சிகளையும் இணைத்து வீடியோவாக பகிர்ந்துவருகிறார்கள். அது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











