இணையத்தில் லீக்கானது விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி.. நீக்கும் முயற்சி தீவிரம்!
சென்னை: மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேர காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது.

நாளை மறுநாள் ரிலீஸ்
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

சிறப்பு வழிபாடு
மாஸ்டர் படம் தொடர்பாக இதுவரை 7 ட்ரெயிலர்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மாஸ்டர் குழுவினரும் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இணையத்தில் லீக்கானது
ரசிகர்களும் மாஸ்டர் பொங்கல் திருவிழா என ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளன.

படக்குழு அதிர்ச்சி
ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் லீக்கான காட்சிகளை நீக்கும் பணியில் மாஸ்டர் படக் குழு தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.
ஷேர் செய்யாதீர்கள்
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது, மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை ஃபார்வர்டு செய்யவோ ஷேர் செய்யவோ வேண்டாம். மேலும் கசிந்த காட்சிகளை பார்த்தால் reportblockxpiracy.com என்ற முகவரியில் எங்களுக்கு பகிருங்கள் என பதிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











