உலக அளவில் வசூல் சாதனை படைத்த மாஸ்டர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை : விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பல தடைகளை தாண்டி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, கௌரி கிஷன்,மாளவிகா மோகனன் ஆன்ட்ரியா என பலர் இதில் நடித்திருந்தனர்.

ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வந்த மாஸ்டர் திரைப்படம் இப்பொழுது உலக அளவில் மற்றுமொரு சாதனை படைத்து பிரமிக்க வைத்துள்ளது.

கோலாகலமாக வெளியாகி

கோலாகலமாக வெளியாகி

மாநகரம், கைதி போன்ற தரமான படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களிடையே நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

மாஸ்டர்

மாஸ்டர்

வழக்கமான விஜய் படமாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அதே மாஸ், கிளாஸ், ஸ்பைஸ் உடன் உருவாகியிருந்த மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். படம் முழுவதும் பவானி தோன்றும் போதெல்லாம் ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது .

வில்லன்

வில்லன்

ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் சரி சமமான காட்சிகள் இதில் அமைக்கப்பட்டிருக்க மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் என பலர் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்து இருக்க அனிருத் இசை அமைத்திருந்தார்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் தமிழில் எந்த அளவிற்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவிற்கு மற்ற மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் விஜய்யின் மார்க்கெட்டை இந்த படம் பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வந்த நிலையில் இப்பொழுது உலக அளவில் மற்றுமொரு வசூல் சாதனையை படைத்துள்ளது.

உலக அளவில்

உலக அளவில்

அந்த வகையில் உலக அளவில் 2021ல் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் மாஸ்டர் 45வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் மாஸ்டர் என்ற பெருமையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த தகவலை இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் தளம் உறுதிபடுத்தியுள்ளது. இதை அறிந்த விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். விஜய் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X