என்ன நண்பா ரெடியா? மாஸ் வீடியோவுடன் வெளியான மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்!

சென்னை: என்ன நண்பா ரெடியா என்ற வாசகம் அடங்கிய வீடியோவுடன் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுக்கான வீடியோ வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு பாக்கியராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தியேட்டரில் ரிலீஸ்

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் அவ்வப்போது தகவல் பரவியது. ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்தது.

பொங்கலுக்கு படம்

பொங்கலுக்கு படம்


படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸானது. இதனை தொடர்ந்து மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் 13ஆம் தி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று தெரிவித்தார்.

என்ன நண்பா ரெடியா?

என்ன நண்பா ரெடியா?

இந்நிலையில் புதிய அப்டேட் குறித்து ஒரு மாஸான வீடியோவை டிவிட்டரில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர் ஸ்க்ரீனில் என்ன நண்பா ரெடியா? என்ற வாசகத்துடன், தியேட்டர்கள் மாஸ்டர் பேனருடன் விழாக்கோலம் பூண்டிருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

அரங்கே அதிர வைக்கும்

அரங்கே அதிர வைக்கும்

மேலும் படத்தின் டீசரில் இடம் பெற்ற பல காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதோடு அந்த டிவிட்டில் "ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்" பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் ட்ரெயிலர்

புத்தாண்டில் ட்ரெயிலர்

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ள நிலையில் நாளை பிரமாண்ட அறிவிப்பு வெளியாக உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X