இணையத்தில் லீக்கான மாஸ்டர் பட காட்சிகள்.. விஜய் சேதுபதியின் சீன்ஸ் வைரல்.. அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை: விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கைதி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர். விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

விஜய்யின் 64வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. விரைவில் விஜய் சேதுபதி - விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

யாரோ செல்போனில்..

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் கூடியிருந்த ரசிகர்களில் யாரோ, செல்போனில் இந்தக் காட்சிகளை படம் பிடித்ததாக தெரிகிறது.

விஜய்சேதுபதியின் காட்சி

விஜய்சேதுபதியின் காட்சி

இந்த காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி கேமராவை பார்த்து நடந்து வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே பிகில்..

ஏற்கனவே பிகில்..

படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதேபோல் விஜய்யின் பிகில் படத்தின் காட்சிகளும் இணையத்தில் லீக்காகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X