இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்!

Recommended Video

Master - Kutti Story | Lokesh Kanagaraj | Anirudh Ravichandran | Thalapathy Vijay

சென்னை: மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் குறித்த முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

என்எல்சி சுரங்கம்

என்எல்சி சுரங்கம்

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஷுட் செய்யப்பட்டு முடிந்துவிட்டது. இதுவரை படம் தொடர்பாக மூன்று போஸ்டர்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான சண்டைக்காட்சி நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் காட்சியாக்கப்பட்டது.

விஜய் செல்பி

விஜய் செல்பி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியது, இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் அவரை காண என்எல்சி முன்பு திரண்டதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, தனக்காக காத்திருந்த ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்ததெல்லாம் தனிக்கதை.

அள்ளும் வியூஸ்

அள்ளும் வியூஸ்

இதனை தொடர்ந்து கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் லிரிக்கல் வீடியா வெளியானது. இதில் பாஜகவை சாடுவதாக கூறப்பட்டது. கார்ட்டூன் பொம்மைகளை கொண்டு பயன்படுத்தி இந்த லிரிக்கல் வீடியோ உருவாக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களை அள்ளியது.

விளம்பர பணிகள்

விளம்பர பணிகள்

இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதாவது, மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் இன்னும் 11 நாளில் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு முழுக்க முழுக்க படத்தின் விளம்பர பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு ட்ரீட்

ரசிகர்களுக்கு ட்ரீட்

படப்பிடிப்பு முழுக்க நிறைவடைந்து விட்டால் ட்ரெயிலர் மற்றும் டீசர் வெளியாகும் என தெரிகிறது. அப்படி வெளியானால் விஜய் ரசிர்களுக்கு ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஏற்கனவே ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் விஜய் ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். அப்படி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டால் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்தான்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X