அடடா.. மாஸ்டர் படம் குறித்து அசத்தல் தகவல்.. விஜய் ஃபேன்ஸ்க்கு ட்ரீட்தான்.. என்னன்னு பாருங்க மக்களே!
சென்னை: மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

பெரும் வரவேற்பு
மாஸ்டர் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பிடித்தாகிவிட்டது. இதுவரை படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் விஜயும் விஜய் சேதுபதியும் இணைந்து இருந்த போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

குட்டி ஸ்டோரி பாடல்
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் லிரிக்கள் வீடியோ வெளியானது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருந்தார். லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி என தொடங்கும் இந்த பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியிருந்தார். அரசியல் பேசும் பாடலாகவும் பாஜக அரசை சாடும் பாடலாகவும் இருந்தது இப்பாடல்.

சம்மர் ட்ரீட்
அதோடு கார்ட்டூன்கள் காவி என பெரும் விமர்சனத்துக்கும் உள்ளானது குட்டி ஸ்டோரி பாடல். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் இளம் பேராசிரியராக நடித்து வருகிறார். படம் ஏப்ரல் மாதம் சம்மர் ட்ரீட்டாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேலையில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அனல் பறக்கும்
இந்நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறினார். நடிகர் விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒன்றாக தோன்றும் காட்சிகள் திரையரங்கில் அனல் பறக்கும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் மார்ச் 15-ம் தேதி நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ரசிகர்கள் இல்லாமல், பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின் உரிமையினை சன் தொலைக்காட்சி இப்போதே கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் குறித்த இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











