லோகேஷ் கனகராஜ் நிஜத்தில் சந்தித்த மனிதரின் கதையே மாஸ்டர்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: விஜயின் மாஸ்டர் படம் குறித்த தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர் விஜய் இந்தப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரடெக்ஷன்
கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தாமதமானது. படம் ரிலீஸ் ஆவதும் தாமதமானது.

தீயாய் பரவும் தகவல்
இந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்த
முக்கிய தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

பொன் பார்த்திபன்
விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் ஆகியோருடன் இணைந்து 'மாஸ்டர்' கதையை எழுதிய பொன் பார்த்திபன், தனது சமீபத்திய பேட்டியில் படம் குறித்த முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

ஒரு நபரின் கதை..
அதாவது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் ஒரு நபரின் கதையால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக கூறினார். ஆனால் அவர் அந்த நபரைப் பற்றியும் 'மாஸ்டர்' கதையைப் பற்றியும் அதிகம் பேசவில்லை.

உண்மை சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











