தலயை திட்டிய தளபதி.. கொந்தளித்த ஃபேன்ஸ்.. ட்ராக் லிஸ்ட்டில் திடீர் மாற்றம்.. வைரலாகும் நியூ லிஸ்ட்!

சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் புதிய ட்ராக் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் அடுத்த மாதம் கோடை விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அனிருத், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

பாடல் தகவல்

பாடல் தகவல்

இந்நிலையில் இன்று காலை படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் என மாஸ்டர் படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது. அதில் மாஸ்டர் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்? என்னென்ன பாடல்கள்? யார் யார் பாடியிருக்கிறார்கள்? பாடல்களை எழுதியவர்கள் யார் என்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

சிங்கிள் ட்ராக்

சிங்கிள் ட்ராக்

அதன்படி படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் யுவன் ஷங்கர் ராஜா தலா ஒரு பாடல்களை பாடியுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் மொத்தம் மூன்று பாடல்களின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

மாற்றப்பட்ட லிஸ்ட்

மாற்றப்பட்ட லிஸ்ட்

இந்நிலையில் ட்ராக் லிஸ்ட்டில் தருதல கதறினா என்ற ஒரு பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் வரிகள் அஜித்தை அட்டாக் செய்வதாக நினைத்த அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கொந்தளித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் இந்த பாடல்வரிகளை மாற்றி விட்டனர்.

மண்டிபோட்ட வாத்தி

மண்டிபோட்ட வாத்தி

தருதல கதறினா என்ற பாடலை போனா போகட்டும் என மாற்றினர். இந்த புதிய ட்ராக் லிஸ்ட் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. படக்குழுவினர் பாடல் வரிகளை மாற்றியதால் செம ஜாலியான அஜித் ரசிகர்கள், தாங்கள் திட்டியதால்தான் பயந்து போய் படக்குழு மாற்றி விட்டதாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக #மண்டிபோட்டவாத்தி என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X