தளபதி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சீக்கிரமே ஒரு மாஸ் அப்டேட் வரப் போகுது.. என்ன தெரியுமா?

சென்னை: கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைவா படம் ரிலீசாகி 7 ஆண்டுகள் ஆனதை தலைவா டே என விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு கொண்டாடினர்.

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் கிடைத்திருக்கிறது.

விரைவில் மாஸ்டர் படம் குறித்த ஒரு மாஸ் அப்டேட் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்க வரப் போகிறது.

எரிச்சல்

எரிச்சல்

சமீப காலமாக தளபதி விஜய் குறித்தும் விஜய்யின் குடும்பத்தை குறித்தும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் அவதூறு கருத்துக்களையும் வரம்பு மீறியும் பேசி வருகிறார். இதனால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே கொதித்து போயுள்ளனர். மீரா மிதுன் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேவையில்லாமல் தளபதி பற்றி பேசினால் அவ்வளவு தான் எனவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

பிரபலங்கள் சப்போர்ட்

பிரபலங்கள் சப்போர்ட்

நடிகர் விஜய்யை பற்றி தப்பா பேசுவதா என நடிகைகள் பூனம் பஜ்வா, சனம் ஷெட்டி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனுக்கு எதிரான தனது முழுமையான கண்டனத்தை நேற்று பதிவிட்டு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். பாரதிராஜாவின் கண்டனம் விஜய் ரசிகர்கள் மனங்களை சற்றே தேற்றியுள்ளது.

பாசிட்டிவ் எனர்ஜி

பாசிட்டிவ் எனர்ஜி

நெகட்டிவிட்டியை விட்டுத் தள்ளு மாப்பு என மாஸ்டர் படத்தில் விஜய் குட்டி ஸ்டோரியில் பாடியுள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரித்து கொண்டாட்ட மோடுக்கு அவர்களை கொண்டு வர மாஸ்டர் படக்குழு மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிடப் போவதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

மாஸ் அப்டேட்

மாஸ் அப்டேட்

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள Quit பண்ணுடா பாடலின் லிரிக் வீடியோ சென்சார் ஆகி உள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அந்த பாடல் ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட் வரும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் நேற்று இரவு முதல் #QuitPannuda என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Thalapathy Vijay to direct Movie • Kadhai, ThiraiKadhai, Eyakkam
சுதந்திர தினம்

சுதந்திர தினம்

காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடலான Quit பண்ணுடா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் மதுவை விட வேண்டும் என்ற ரீதியில் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X