For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing

    |

    சென்னை: தளபதி விஜய்யின் கொல மாஸ் டான்ஸில் உருவாகி உள்ள வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

    சன் மியூசிக்கில் எக்ஸ்க்ளூசிவ் ஆக வெளியான வாத்தி கம்மிங் பாடல் சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலிலும் வெளியாகி உள்ளது.

    மாஸ்டர் திரைப்படத்தின் ஓப்பனிங் பாடலாக வாத்தி கம்மிங் வீடியோ பாடல் வேற லெவலில் ஏகப்பட்ட சாதனைகளை யூடியூபில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாஸ்டர் ஆன் பிரைம்

    மாஸ்டர் ஆன் பிரைம்

    தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29ம் தேதியே அமேசான் பிரைமில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள அறிவிப்பு இன்று வெளியாகி ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. மாஸ்டர் பிரைமில் வெளியாவதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏகப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

    குட்டி ஸ்டோரி வீடியோ

    குட்டி ஸ்டோரி வீடியோ

    சில நாட்களுக்கு முன்னர் தான் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் வாத்தியாராக செல்லும் விஜய், அந்த மாணவர்களுடன் ஆடி பாடும் பாடலாக குட்டி ஸ்டோரி பாடல் அமைந்தது.

    வெளியானது வாத்தி கம்மிங்

    வெளியானது வாத்தி கம்மிங்

    இந்நிலையில், தற்போது சன் மியூசிக்கில் எக்ஸ்க்ளூசிவ்வாக வெளியான வாத்தி கம்மிங் பாடல் சோனி மியூசிக் சவுத் யூடியூப் தளத்திலும் அதே சமயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் இன்ட்ரோ பாடலாக வாத்தி கம்மிங் பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கொல மாஸ் டான்ஸ்

    எப்பவுமே தளபதி விஜய் வெறித்தனமாகவும் வித்தியாசமாகவும் தனது பட பாடல்களுக்கு நடனமாடுவது வழக்கம் தான். ஆனால், அதையும் தாண்டி இந்த வாத்தி கம்மிங் பாடலில் பாதி தூக்கத்துடனும், அரை போதையுடனும் கொல மாஸாக விஜய் நடனமாடியுள்ளதை பார்க்கும் ரசிகர்கள், நிச்சயம் இந்த படத்தையும் பாடலையும் தியேட்டரில் தான் பார்த்து கொண்டாட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    விஜய்யுடன் ஆண்ட்ரியா

    விஜய்யுடன் ஆண்ட்ரியா

    அலுமினி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் விஜய்யின் நண்பர்களான ஸ்ரீமன், பிரேம் குமார், ஸ்ரீநாத், சஞ்சீவ் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இந்த பாடலின் கடைசி நிமிடங்களில் சேர்ந்து ஆடும் காட்சிகளும் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன. மாஸ்டர் படத்தில் குறைவான நேரத்திலேயே ஆண்ட்ரியா வந்தாலும், அவரது போர்ஷன் மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

    வாத்தி கம்மிங் டிரெண்டிங்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் வீடியோ பாடல் வெளியாகி உள்ள நிலையில், #VaathiComing என்ற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் வெறித்தனமாக வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Thalapathy Vijay’s Master opening song Vaathi Coming video out now. Vijay fans creat #VaathiComing and trending in twitter with Vaathi Coming song screenshots.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X