மாஸ்டர் அப்டேட்.. லாக் டவுன் நேரத்திலும் மறக்காம வரும்.. டிரெண்டிங்கில் #PolakatumParaPara!
சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொளக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
லொகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதத்திற்கு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொளக்கட்டும் பற பற
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் லிரிக் வீடியோக்கள் வரிசையாக குட்டி ஸ்டோரி பாடலில் தொடங்கி வெளி வந்து வைரலாகி உள்ளன. இந்நிலையில், தற்போது பொளக்கட்டும் பற பற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடல் விஜய் சேதுபதியின் இன்ட்ரோ பாடலாகவோ, அல்லது கிளைமேக்ஸ் பாடலாகவோ இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

பவானி
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பவானி என்கிற லோக்கல் டான் ரோலில் நடிக்கிறார் என்ற அப்டேட்டை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தோம். அதை உறுதி செய்யும் விதமாக, இந்த பாடலில் வரும் பவானி என்கிற வரி விஜய்சேதுபதியின் கதாபாத்திரப் பெயரை உறுதிபடுத்தி உள்ளது.

80 மில்லியன்
பிப்ரவரி 14ம் தேதி வெளியான மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் இதுவரை 42 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது. மேலும், வாத்தி கம்மிங் பாடல் 23 மில்லியன் வியூஸும், வாத்தி ரெய்டு 10 மில்லியன் வியூஸும் கடந்து அசத்தி வருகிறது. ஒட்டுமொத்தமாக மாஸ்டர் படத்தின் ஆல்பம் யூடியூபில் 80 மில்லியன் வியூஸை கடந்துள்ளன.

மாஸ் ஸ்பீச்
மார்ச் 15ம் தேதி சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசுவதற்கு முன்னதாக விஜய் சேதுபதி செம மாஸ் ஸ்பீச் கொடுத்திருந்தார். கடவுள் குறித்தும், மனிதம் குறித்தும் தனது தந்தை பற்றியும் நடிகர் விஜய் சேதுபதி பேசியது வைரலானது.
வேற லெவல் டிரெண்டிங்
கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ள வருத்தத்தில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு, டிரெண்ட் செய்ய சூப்பரான வாய்ப்பை மாஸ்டர் படக்குழு இந்த லிரிக் வீடியோவை வெளியிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதான் சாக்கு என நினைத்துக் கொண்ட தளபதி ரசிகர்கள் இந்தியளவில் #PolakatumParaPara என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











