சந்தோஷம் கண்ணுலயே தெரியுது.. மாஸ்டர் போஸ்ட் புரொடக்ஷன்.. செம ஹேப்பியா போஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை: மாஸ்டர் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்டூடியோவில் எடுத்த தனது புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Master Back to Work | Lokesh Kanagaraj massive Update, Thalapathy Vijay | #PostProduction

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், சேத்தன், சஞ்சய், ஸ்ரீநாத், ஸ்ரீமன், செளந்தர்யா, விஜே ரம்யா, ரமேஷ் திலக், தீனா என நட்சத்திர பட்டாளமே மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் கொரொனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.

எல்லாமே புதுசா இருக்கு

எல்லாமே புதுசா இருக்கு

மாநகரம், கைதி என இரு படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என பெயர் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜுக்கு மூன்றாவது படமாக தளபதி விஜய்யை இயக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், நிறைய டிரெஸ், லொக்கேஷன் மாற்றம் என பல விசயங்கள் இந்த படங்களில் புதுசா இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ரொம்ப அப்செட்

ரொம்ப அப்செட்

வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், நேரடியாக மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து, நடிகர் விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், ஷூட்டிங் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால், ரொம்பவே அப்செட் ஆகி இருந்தார் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பெரிய டீம்

பெரிய டீம்

சின்ன டீமை எல்லாம் வைத்துக் கொள்ளாமல் பல உதவி இயக்குநர்களுக்கு தனது டீமில் இடம் கொடுத்து அவர்களின் திறமைகளை பாராட்டவும், திறமையானவர்களுக்கு வாய்ப்பு மற்றும் அங்கீகாரம் அளிப்பதில் எந்தவொரு பாகுபாடும் காட்டாமல் பார்த்துக் கொண்டு வருகிறார். ஆடை பட இயக்குநர் ரத்னகுமாரை இந்த படத்திற்கு வசனங்களை எழுதவும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகாவுடன்

மாளவிகாவுடன்

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் உடன் லோகேஷ் கனகராஜ் காதலில் விழுந்து விட்டதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பல விதமான வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டே லோகேஷுக்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் ஆகி ஆத்விகா, ஆரூத்ரா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் மாஸ்டர் படத்தை திரைக்கு கொண்டு வர அத்தனை முயற்சிகளையும் லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார். பான் இந்தியா படமாகவும் இந்த படம் வெளியாகும் என ஐநாக்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செம மாஸ்

செம மாஸ்

தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கும் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட மாஸ் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செம மாஸாக இருக்கீங்க அண்ணா என விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

டீசர் எப்போ

டீசர் எப்போ

ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தாலும், தியேட்டர்கள் அடுத்த மாதம் திறக்கப்படுமா என்பது சந்தேகம் தான். அதனால், தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதியின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X