twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி விஜய் நிஜமாவே மாஸ்டர் தான்.. ரிலீசுக்கு முன்னாடியே 200 கோடி பிசினஸ் ஆகிடுச்சாம்!

    |

    சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு முன்பே 200 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷ செய்தியாக மாஸ்டர் படத்தி ப்ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஹெலிகாப்டர் ட்ரோனுடன் தல... வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்ஹெலிகாப்டர் ட்ரோனுடன் தல... வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

    ஷூட்டிங்கே முடியல

    ஷூட்டிங்கே முடியல

    சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் பாதி ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் பிசினஸ் தொடங்கியுள்ளது.

    லோ பட்ஜெட்

    லோ பட்ஜெட்

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடி வசூல் செய்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படம் 60 முதல் 70 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஆனாலும், அதன் பிசினஸ் மற்றும் பாக்ஸ் ஆஃபிஸ் பிகிலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வசூல் மாஸ்டர்

    வசூல் மாஸ்டர்

    கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் படு வேகமாக நடந்து வருகிறதாம்.

    200 கோடி வசூல்

    200 கோடி வசூல்

    தியேட்டர் உரிமம், சாட்டிலைட் உரிமம் என பலதரப்பட்ட பிசினஸ்கள் மாஸ்டர் படத்தை மையமாக வைத்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், லோகேஷ் - விஜய் காம்போ வேற லெவலில் வரும் என விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என மாறி மாறி மாஸ்டர் படத்தை கைப்பற்ற இப்போதே முயற்சி செய்து வருகின்றனர்.

    ரஜினிக்கு அடுத்து

    ரஜினிக்கு அடுத்து

    பொதுவாக படம் வெளியாகும் முன்பே 200 கோடி பிசினஸ் எல்லாம் தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்போது ரஜினிக்கு அடுத்தபடியாக 200 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தளபதி விஜய்க்கு சாத்தியமாகியுள்ளது.

    விஜய் திட்டவட்டம்

    விஜய் திட்டவட்டம்

    அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரும் விதமாக மாஸ்டர் படம் அமைய வேண்டும். தியேட்டர் உரிமைகளை பங்கிடுவதில் ஒரு சாராருக்கு மட்டும் லாபம் தரக்கூடியதாக இல்லாமல், அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் லாபம் அடையும் படியாக சரியான விலையில் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை தயாரிப்பு தரப்பிடம் நடிகர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.

    வாழ்த்துக்கள் மட்டும்

    விஜய்சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள விஜய்சேதுபதியின் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுகுறித்த சஸ்பென்ஸை காக்க வேண்டும் என நினைத்த லோகேஷ் கனகராஜ் வெறும் வாழ்த்துக்களை மட்டும் சொல்லி ட்வீட் போட்டுள்ளார். இதனால், விஜய்சேதுபதி ரசிகர்கள் சற்றே வருத்தம் அடைந்துள்ளனர்.

    English summary
    The theatrical and other rights of the highly anticipated movie of the year, Vijay's 'Master', have been sold even before the film wraps up the shoot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X