மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது...பூஜை போட்டாச்சு!
சென்னை : விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து இருந்த சேவியர் பிரிட்டோ அடுத்த திரைப்படத்திற்கான கதாநாயகி தேர்வை சில வாரங்களுக்கு முன்பு வைத்து இருந்தார்.
மாஸ்டரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் முன்னணி நடிகரின் படத்தை தயாரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்து சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

வசூல் வேட்டை
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று சொல்லிவைத்தது போல கில்லி மாதிரி வெளியாகி சக்கைப் போடு போட்டு இன்று வரை வசூல் வேட்டை நடத்தி வர இந்தப் படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் இன்று வரை உலக அளவில் 250 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

ராக்கெட் வேகத்தில்
இவ்வாறு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை தயாரித்த பிறகு சேவியர் பிரிட்டோ முன்னணி நடிகரின் திரைப் படத்தை தயாரிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய படத்திற்கு கதாநாயகி தேவை என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் பூஜையுடன் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கப்படும்
அந்த வகையில் புதிதாகத் தயாரிக்கும் படத்திற்கு " அழகிய கண்ணே " என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பூஜை தற்பொழுது சென்னையில் நடைபெற்றுள்ளது. இயக்குனர் ஆர். விஜயகுமார் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் பிப்ரவரி 15ஆம் தேதி "அழகிய கண்ணே " படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மாஸ்டர்
லியோ சிவக்குமார் மற்றும் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் நடிக்க இருக்கும் இதர நடிகர் நடிகைகளின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாக இருக்க மாஸ்டர் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











