தல– தளபதியின் டைரக்டர் – தயாரிப்பாளர் இணையும் புதிய படம்...ஹீரோ யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க
சென்னை : விஜய்யின் மாமாவும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கு திரும்பி, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தார். விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான இந்த படம், கொரோனா பேரிடர் காலத்திலும் தியேட்டர் மற்றும் ஓடிடி இரண்டிலும் வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் தனத எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் மற்றும் எஸ்தல் என்டர்டைனர் ஆகிய பேனரில் தமிழில் பல படங்களை தயாரிக்க சேவியர் பிரிட்டோ முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக நடிக்கும் அழகிய கண்ணே படம் துவங்கப்பட்டது.

தற்போது, அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்க போவது வேறு யாரும் இல்லை மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி தான்.
நடிகர் அதர்வாவின் தம்பி தான் இந்த ஆகாஷ் முரளி. அதுமட்டுமல்ல இவர் தான் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவை திருமணம் செய்து கொள்ள போகிறார். தனது மருமகனை ஹீரோ ஆக்க தான் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











