'' மாஸ்டர்'' திட்டமிட்டபடி ரிலீஸ்.. தயாரிப்பாளரின் மனைவி தகவல்!
சென்னை : திட்டமிட்டபடி மாஸ்டர் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளரின் மனைவி விமலா ராணி ப்ரிட்டோ கூறியுள்ளார்.
Recommended Video
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா தொற்று அச்சத்தால் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றத்தால் படம் ஏப்ரல் 9 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி பரவியது.

இது குறித்து, தற்போது பதிலளித்துள்ள தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோவின் மனைவி விமலா ராணி ப்ரிட்டோ இந்த தகவலை மறுத்துள்ளார். கட்டாயம் படம் ஏப்ரல் 9 வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்
தனது கணவர் சேவியர் ப்ரிட்டோ சிறு வயதில் இருந்தே பல மேடைகளில் பேசி வருவதாகவும் பலர் முன்னிலையிலும் தயங்காமல் பேசுபவர் தன் கணவர் என்றார். மாஸ்டர் வெளியீட்டு விழாவில் அவர் மகிழ்ச்சி தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசியதாக விமலா ராணி கூறினார்.

விஜயின் முந்தைய படங்கள் அனைத்தும் பல கோடிகள் செலவளித்து பெரிய பொருட்செலவில் அதிக நாட்களில் படம் எடுக்கப்பட்டது ஆனால் மாஸ்டர் படமோ வெறும் 130 நாட்களில் எடுக்கபட்டது ரசிகர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. படம் இவ்வளவு விரைவாக எடுக்கபட காரணம் இந்த கதைக்கு இவ்வளவு தான் தேவைபட்டது அதை சரியாக செய்திருந்தார் லோகேஷ் என கூறினார் விமலா ராணி .

மேலும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூறிய படி பல ஆண்டுகளுக்கு முன்பே சேவியர் விஜயுடன் படம் செய்ய ஆசை பட்டார். பிகில் படம் பெரிய வெற்றி அடைந்த சமயத்தில் இந்த படத்திற்கு ஒத்து கொண்டார் விஜய் இந்த சமயத்தில் இந்த கதையை நீங்கள் தயாரித்தால் நன்றாக இருக்கும் என விஜய் கேட்க சேவியர் தரப்பில் இருந்து உடனே சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேசிய தயாரிப்பாளரின் மனைவி விமலா, விஜயின் குட்டி ஸ்டோரி கேட்டவுடன் இது வித்தியாசமாக இருக்கிறது என்ற உணர்வு தான் இருந்தது ஆனால் வாத்தி கம்மிங் பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பகிர்ந்துள்ளார் .
ஆரம்ப காலத்தில் விஜயை இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துவிட்டதா என கலாய்த்தார்கள் அது எங்களுக்கு நன்றாக ஞாபகம் உள்ளது இன்று அவர் சூப்பர் ஸ்டார் அவரின் வெற்றியை நாங்கள் கண்கூட பார்த்து வந்திருக்கிறோம் என விஜயை புகழ்ந்து கூறினார் விமலா ராணி.


Click it and Unblock the Notifications











