இன்னொரு வாட்டி பசங்க மேல கை பட்டது.. வாத்தி ரெய்டு வரும்.. மாஸ்டரின் அடுத்த மாஸ் புரமோ ரிலீஸ்!
சென்னை: தளபதி விஜய்யின் அதிரடி வசனத்தோடு இன்னொரு மாஸ்டர் படத்தின் மாஸ் புரமோ வெளியாகி உள்ளது.
Recommended Video
வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கிட்டத்தட்ட ஓராண்டு கால வெயிட்டிங், படம் தியேட்டருக்கு வந்ததும் திருவிழா கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

கைதி படத்தை விட
கடந்த ஆண்டு விஜய்யின் பிகில் படத்திற்கே கடும் போட்டியாக அமைந்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி உள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் படம் கைதி படத்தை விட பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என இயக்குநர் கூறியுள்ளார்.

சரவெடி புரமோஷன்
மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு படத்தின் புதிய புரமோ டீசர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒவ்வொரு காட்சியும் அனல் பறக்கும் விதமாக அமைந்துள்ளதால், விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வேற லெவல் ஸ்டன்ட்
சமீபத்தில் மாஸ்டர் படம் பற்றி பேசிய சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, மெட்ரோ ரயிலில் நடக்கும் சண்டை காட்சியும், கிளைமேக்ஸ் சண்டை காட்சியும் வெறித்தனமாக இருக்கும் என பேசியுள்ளார். ஏற்கனவே போக்கிரி படத்தில் விஜய் போட்ட ரயில் சண்டையே அதிர வைத்த நிலையில், இந்த படத்தில் அதையும் தாண்டி மாஸ் இருக்கும் என்பது நிச்சயம்.
வாத்தி ரெய்டு வரும்
நேற்று முன் தினம் வாத்தி கம்மிங் பாடல் டீசர் வெளியானது. நேற்று முடிஞ்சா மோதிப் பாரு என்கிற வசன புரமோ வைரலானது. இந்நிலையில், தற்போது வாத்தி ரெய்டு வரும் பாடலுடன் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் நிறைந்த கலக்கல் புரமோ வெளியாகி பொங்கல் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

பசங்க மேல
கல்லூரிக்குள் 50, 60 ரவுடிகளை இறக்கிட்டாங்க என மாணவர் ஒருவர் சொல்ல, இறங்கி அடிக்கும் தளபதி விஜய், "இன்னொரு வாட்டி பசங்க மேல கை பட்டது" என மிரட்டும் வசனத்துடன் இந்த மூன்றாவது புரமோ பட்டையை கிளப்புகிறது. 50 சதவீத இருக்கையா? அல்லது 100 சதவீத இருக்கையா என்கிற பஞ்சாயத்து தனியாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











