'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்!
சென்னை: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும், நடிகை வனிதா விஜயக்குமாரும் இணைகிறன்றனர் - தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், விரைவில் திருமண ரீதியாகவும்.
இதை இருவரும் இணைந்து கூட்டறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். திருமணம் குறித்த திட்டங்களை பின்னர் அறிவிக்கவுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இருவரும் நல்ல நட்புடன் இருப்பதாகவும், இதை இரு வீட்டாரும் சந்தோஷமாக ஆதரிப்பதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

விஜயக்குமார்- மஞ்சுளா மகள்
விஜயக்குமார், மஞ்சுளா தம்பதியின் மகள்தான் வனிதா விஜயக்குமார். சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.

அல்போன்சாவின் தம்பி
முன்னாள் நடிகை அல்போன்சாவின் தம்பிதான் ராபர்ட். டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர். சிம்புவின் பல நடனங்களை வடிவமைத்தவர் ராபர்ட்தான்.

நல்ல நட்பு
தற்போது வனிதா விஜயக்குமாரும், ராபர்ட்டும் நல்ல நண்பர்களாகப் பழகி வருகிறார்களாம். இதை அவர்களே அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அதிகாரப்பூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை...

எல்லோருக்கும் நன்றி
எங்களது கடினமான நேரத்திலும், எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எங்களது குடும்ப உறுப்பினர்கள் போல இருந்து அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். இதற்காக மகிழ்கிறோம்.

அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை
நாங்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை விளக்க விரும்புகிறோம்.

நல்ல நண்பர்கள்
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளோம். எங்களது இரு தரப்பு குடும்பத்தினருக்கும் எங்களது நட்பு குறித்து நன்றாகத் தெரியும். அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இணைந்து தயாரிக்கப் போகிறோம்
இருவரும் இணைந்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளோம். எங்களது இருவரது தொழில் ரீதியான வெற்றிக்கும் இருவரும் ஒருவரை ஒருவரை வாழ்த்தி இதைத் தொடங்குகிறோம்.

திருமணமும் உண்டு
விரைவில் எங்களது திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதேபோல திருமணத் திட்டமும் உள்ளது. இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக அறிவித்து பின்னர் நடக்கும். அனை்வருக்கும் நன்றி.... என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











